30/8/09

பெங்களூரு:வகுப்புக்கலவரத்தில் இளைஞர் படுகொலை, 5000 போலீசார் குவிப்பு

0 கருத்துகள்

பெங்களூரு:கடந்த வியாழக்கிழமை இளைஞர் படுகொலைச்செய்யப்பட்டு கல்வீச்சு சம்பவம் நடந்ததையடுத்து கிழக்கு பெங்களூரிலிலுள்ள கெ.ஜி.ஹள்ளி மற்றும் ஃப்ரேசர் நகர் ஆகிய பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டு கலவரம் உருவாகும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து நகர காவல்துறை 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஃப்ரேசர் நகர், டி.ஜெ.ஹள்ளி, கெ.ஜி.ஹள்ளி, ஹன்னூர்,நகவரா, பனஸ்வாடி, டன்னேரி சாலை மற்றும் சம்பிகெஹள்ளி ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். வன்முறைகள் நடைபெறுவதற்கு காரணம் என்னவெனில் கெ.ஜி.ஹள்ளி பகுதியிலிலுள்ள மஸ்ஜிது ஒன்றின் வழியாக மாலை 6.30 மணியளவில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் சென்றுள்ளது.இதில் கலந்துக்கொண்டவர்கள் மோசமான கோசங்களை எழுப்பியுள்ளனர்.அவ்வேளையில் முஸ்லிம்கள் மஸ்ஜிதில் நோன்பு திறந்துவிட்டு மஃரிப் தொழுகைக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் மஸ்ஜிதிலிருந்த முஸ்லிம்கள் ஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்களிடம் சத்தம் போடாதீர்கள் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து பிரச்சனை உருவாகியுள்ளது.நிலைமை மோசமடையவே கெ.ஜி.ஹள்ளி இன்ஸ்பெக்டர் டி.ரங்கப்பா தலைமையிலான படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை சமாளித்து அமைதி ஏற்படுத்த முயற்சி செய்துள்ளனர்.
இருந்த போதிலும் இப்பிரச்சனை வியாழக்கிழமை இரவிலிருந்து கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.இந்நிலையில் விநாயகர் விஜர்சன ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட கிறிஸ்டோபர் வினித்(வயது 22) என்ற இளைஞருக்கு(கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்ட இவர் ஆண்டுதோறும் விநாயக விஜர்சன ஊர்வலத்தில் தவறாமல் கலந்துக்கொள்பவர்) உடனடியாக லிங்கராஜபுரத்திற்கு வருமாறு அழைப்புவரவே கிறிஸ்டோபர் தனது நண்பர் விக்ரமுடன் லிங்கராஜபுரத்திற்கு புறப்பட்டு செல்ல எத்தனித்து சில அடிகளை தாண்டிய வேளையில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து வினித்தை வழிமறித்து தாக்கி கத்தியால் குத்தியுள்ளது.வினித்தை காப்பாற்ற முயன்ற விக்ரமையும் ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.இந்நிலையில் விக்ரம் வினீத்தின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கவே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வினீத்தை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிட்சை பலனளிக்காமல் வினீத் இறந்துவிட்டார். இச்செய்தி வெளியே பரவியதும் சம்பிகெஹள்ளி மற்றும் நகவரா ஆகிய பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது.இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை 144 தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. பெங்களூரு ஒன்றின் முக்கிய பகுதியில் கடைகளும் ஏ.டி.எம் செண்டர்களும் மூடப்பட்டன.
செய்தி:Frontworld.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.