29/8/09

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் சுஷ்மா சுவராஜ்? RSS சமரசத் திட்டம்!

0 கருத்துகள்

பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசலை முடிவிற்குக் கொண்டுவர அத்வானியை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகச் செய்துவிட்டு, அவருக்கு பதிலாக சுஷ்மா சுவராஜை நியமிப்பது என்று (RSS)ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் ஒரு சமரசத் திட்டத்தை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.
புது டெல்லியில் தங்கியுள்ள ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கின் தலைவர் மோகன் பகவத், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். அதனடிப்படையில் பா.ஜ.க. கட்சி அமைப்பிலும், நாடாளுமன்றத்திலும் பொறுப்பிலுள்ளவர்களை மாற்றும் ஒரு சமரசத் திட்டத்தை தயாரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மோகன் பகவத் தாயாரித்துள்ள அந்த சமரசத் திட்டத்தின்படி, இந்த ஆண்டு இறுதியில் பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகும் ராஜ்நாத் சிங்கிற்கு பதிலாக தற்போது மாநிலங்களவையில் அக்கட்சியின் தலைவராக உள்ள அருண் ஜெய்ட்லி கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து தற்போது அக்கட்சியின் துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடு, மாநிலங்களவைக் கட்சித் தலைவராவார் என்றும் கூறப்படுகிறது.மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அத்வானி அப்பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள, அவருக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சித் தலைவராவார் என்று கூறப்படுகிறது. பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அத்வானிக்கு எதிராக கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளதையடுத்து அவரை அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விடுவிப்பது என்பது முடிவாகிவிட்ட ஒன்று என்று கூறப்படுகிறது. கட்சியின் உள்கட்சிப் பூசலிற்கு முடிவு கட்ட மோகன் பகவத் உருவாக்கியுள்ள சமரசத் திட்டம் இறுதி செய்யப்ட்டுள்ள நிலையில், இன்று மாலை அவரை அத்வானி சந்தித்துப் பேசுகிறார்.இந்தச் சந்திப்பிற்குப் பிறகு எடுக்கப்படும் சில முடிவுகளின்படி அனைத்துத் தலைவர்களும் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.