29/8/09

சவூதியில் குண்டுவெடிப்பு:மயிரிழையில் உயிர் தப்பிய இளவரசர்

0 கருத்துகள்
ரியாத்:சவூதி அரேபியா ராஜ குடும்பத்தில் பிரபலமானவரும் சவூதி அரசின் உள்துறை இணை அமைச்சருமான முஹம்மது பின் நாயிஃப் ஜித்தாவில் தனது மாளிகையில் நடந்த குண்டுவெடிப்பிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.
உடலில் வெடிக்குண்டுகளைக் கட்டிக்கொண்டு அல் காய்தா போராளி என்று சந்தேகிக்கப்படும் நபர் தான் தாக்குதல் நடத்தியதாக சவூதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சவூதி பிரஸ் ஏஜன்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இளவரசருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டது எனவும் மயிரிழையில் அவர் உயிர் தப்பியதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.சவூதி மன்னர் அப்துல்லாஹ் மருத்துவமனைக்கு சென்று தனது மருமகனும் உள்துறை இணை அமைச்சருமான முஹம்மதை சந்தித்து ஆறுதல் கூறினார். இத்தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்பதாக அல்காயிதாவின் இணையதளத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முஹம்மது பின் நாயிஃப் ஜித்தாவில் ரெட் சீ துறைமுகத்தில் ரமலானில் தன்னை சந்திக்கவந்தவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுதுதான் இத்தாக்குதல் நடைபெற்றது. குண்டுவெடிப்பில் தாக்குதல் நடத்தியவரும் கொல்லப்பட்டதால் விபரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை.அல்காயிதாவுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டி சில அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கைகளை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரசு எடுத்தபின் ராஜ குடும்பத்தை சார்ந்தவர் மீது நடைபெறும் முதல் தாக்குதல் இது. இந்த மாத துவக்கத்தில் அல்காயிதா தொடர்புடையவர்கள் எனக்குற்றஞ்சாட்டி 44 பேர்களை சவூதி அரசு கைதுச்செய்தது. இதில் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் சவூதி குடிமகன்கள். ஆயுதங்களும் வெடிப்பொருள்களும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக சவூதி உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.10 ஆண்டுகளுக்கு முன்பு உள்துறை அமைச்சராக பதவியேற்ற முஹம்மது பின் நாயிஃப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் சம்பந்தமான பொறுப்பை வகித்து வருகிறார். இவர் சவூதி உள்துறை அமைச்சரின் மகனாவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.