29/8/09

மொராதாபாத்:முஸ்லிம்கள் மீது உ.பி.அரசுப்படை(PAC) நடத்திய தடியடியில் 18 பேர் படுகாயம், 4 பேர் நிலை கவலைக்கிடம்

0 கருத்துகள்
நேற்று(ஆகஸ்ட் 27) இரவு மொராதாபாத்திலிலுள்ள ஷா பத்ருத்தீன் தர்காவில் ரமலான் இரவுத்தொழுகையான தராவீஹ் தொழுவதற்கு ஒன்று கூடிய முஸ்லிம்கள் மீது உ.பி.அரசுப்படையான PAC (Provinsional Armed Constabulary) நடத்திய கண்மூடித்தனமான தடியடியில் 18 பேர் காயமடைந்தனர்.அதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் மொராதாபாத் நகரத்திலிலுள்ள முக்கியமான முஸ்லிம் தலைவர்கள் சமயோஜித தன்மையுடன் செயல்பட்டதாலும் முஸ்லிம் சமுதாயம் அமைதி காத்ததாலும் பெருமளவிலான கலவரம் உருவாகாமல் தடுக்கப்பட்டது.ஆயினும் இந்நிகழ்வு பற்றிய செய்தி வேகமாக பரவியதால் போலீஸ் படையின் எண்ணிக்கை அதிகபடுத்தப்பட்டுள்ளது.
ராபிதா இஸ்லாமிய செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி உ.பி.அரசுப்படையான PAC யின் 23 வது பிரிவிற்கான பயிற்சி முகாமிற்கு உள்பகுதியில் அமைந்துள்ள ஷா பத்ருத்தீன் தர்காவில் ரமலான் இரவுத்தொழுகை நடத்த முஸ்லிம்கள் வந்தபொழுது அப்படைப்பிரிவின் தலைமை அதிகாரி அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளூர் முஸ்லிம்கள் அதுவும் PAC யிடம் பெயர்பதிவுச்செய்யப்பட்டுள்ளவர்கள் மட்டுமே தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார்.அதற்கு தொழுகை நடத்த வந்த முஸ்லிம்கள் தாங்கள் அனைவரும் உள்ளூர்வாசிகள்தான் என்று விளக்க முயன்றபோதும் PAC யின் அதிகாரி அதனை காதுகொடுத்து கேட்கவில்லை.இந்நிலையில் தராவீஹ் தொழுகைக்கான நேரம் தாண்டிப்போகவே முஸ்லிம்கள் PAC யின் அராஜகத்தை எதிர்த்து போராட ஆரம்பித்தனர்.உடனே PAC படையினர் அநீதமான முறையில் கண்மூடித்தனமாக முஸ்லிம்கள் மீது தடியடி நடத்த ஆரம்பித்தனர்.இதில் 18 பேர் காயமடைந்தனர்.அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.முஸ்லிம்கள் தாக்கப்பட்ட செய்தி வேகமாக பரவவே பல முஸ்லிம்களும் சாலையில் இறங்கி PAC க்கெதிரான கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர்.ஆயினும் மொராதாபாத் நகர இமாம் மவ்லானா காரி ஹாஃபிஸ் சயீத் மஸூம் அலி, மேயர் எஸ்.டி.ஹஸன் உள்ளிட்ட முஸ்லிம் பிரமுகர்கள் அவர்களை அமைதிப்படுத்தினர்.மாவட்ட நீதிபதியும் மக்களை அமைதிக்காக்கும்படியும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய PAC படையைச்சார்ந்த குற்றவாளிகளை கைதுச்செய்ய முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
.பி.அரசுப்படையான PAC முஸ்லிம்களுடன் தொடர்ந்து விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது.1980 ஆம் ஆண்டு PAC படையினர் தலைமை தாங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் 2000 பேர் கொல்லப்பட்டனர்.
News source:twocircles.net

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.