28/8/09

புத்தகத்திற்கெதிரான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார் ஜஸ்வந்த்

0 கருத்துகள்
புதுடெல்லி:பா.ஜ.க விலிருந்து வெளியேற்றப்பட்ட மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் ஜின்னாவை புகழ்ந்து எழுதியதாக கூறி குஜராத் மாநிலத்தில் தனது நூலை தடைச்செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்துள்ளார்.
இந்திய-பாக். பிரிவினைக்கு ஜின்னா காரணமில்லை என்று கூறும் ஜின்னா-இந்தியா-பிரிவினை-சுதந்திரம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டு இரண்டு தினங்களிலேயே மோடித்தலைமையிலான குஜராத் அரசு அதனை விற்க தடைச்செய்தது. மோடி அரசு தனது நூலுக்கு தடை ஏற்படுத்தியது அதனை படிக்கக்கூடச்செய்யாமல் என்று ஜஸ்வந்த் சிங் சுப்ரீம் கோர்ட்டில் பதிவுச்செய்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.
புத்தகம் தடைச்செய்யப்பட்டு சில மணிநேரங்களிலேயே ஜஸ்வந்த் சிங் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.சர்தார் வல்லபாய் பட்டேலின் தேசப்பற்றை பற்றி தனது நூலில் கேள்வி எழுப்பியதாலேயே ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டதாக பா.ஜ.க கூறிய போதிலும் ஜஸ்வந்த் சிங்கின் நீக்கத்திற்கெதிராக அருண்சோரி,யஷ்வந்த் சின்கா ஆகிய மூத்த தலைவர்கள் கேள்வி எழுப்பி களத்திலிறங்கியதால் பா.ஜ.க சிக்கலில் மாட்டியுள்ளது.இத்தகைய சூழலில்தான் ஜஸ்வந்த் சிங் மோடி அரசுக்கெதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.