28/8/09

ஹாஃபிஸ் சயீதிற்கெதிரான இண்டர்போல் நோட்டீசில் முரண்பாடுகள்

0 கருத்துகள்

இஸ்லாமாபாத்:ஹாஃபிஸ் சயீதிற்கெதிராக இண்டர்போல் வெளியிட்டுள்ள ரெட்கார்னர் நோட்டீசை இந்திய பத்திரிகைகளும் அரசும் மிகப்பெரியதாக சித்தரித்தபோதிலும் சயீதிற்கு ஜமாஅத்து தாஃவா இயக்கத்தோடு தொடர்புப்படுத்தும் அடிப்படை விபரங்கள் கூட இல்லை என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ யின் கோரிக்கைக்கு இணங்க கடந்த செவ்வாக்கிழமை அன்று இண்டர்போல் லஷ்கர்-இ-தய்யிபாவின் ஸ்தாபகரும்,ஜமா அத்துத்தாஃவா தலைவருமான ஹஃபீஸ் சயீத் மற்றும் லஷ்கர்-இ-தய்யிபா ஆபரேசனல் கமாண்டர் ஸகீயுர்ரஹ்மான் லக்வி ஆகியோருக்கெதிராக ரெட்கார்னர் நோட்டீஷை வெளியிட்டது.

லக்விவிக்கெதிரான நோட்டீசில் ஏறக்குறைய விபரங்கள் சரியாக இருந்தபோதிலும் சயீதிற்கெதிரான நோட்டீசில் அபத்தங்களும் முரண்பாடுகளும் நிறைந்துக்காணப்படுகின்றன.அவருடைய பெயர் போலும் தவறாக பதிவுச்செய்யப்பட்டுள்ளது.ஹாஃபிஸ் சயீத் என்ற பெயருக்கு பதிலாக செய்த் ஹாவி சாப் என்றுள்ளது.அவரைப்பற்றிய மற்ற விபரங்கள் ஒரு பிறந்த தேதியும் பாகிஸ்தான் குடிமகன் என்பது மட்டும்தான்.செய்த் என்பது நபி(ஸல்…)அவர்களின் வழித்தோன்றல்களை குறிப்பது.சயீத் என்பது சாதாரண பெயர்.ரெட் கார்னர் நோட்டீசை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பிரிட்டனிலிலுள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.சயீதிற்கெதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டபோதும் அவருக்கெதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலாது என்றும் மாலிக் தெரிவித்தார்.ஆனால் லக்வி தற்போது பாக்.அதிகாரிகளின் கஸ்ட்டியிலுள்ள நிலையில் இண்டர்போல் ஏன் அவருக்கெதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது என்பது தனக்கு புரியவில்லை என்று ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.சயீதிற்கெதிரான நோட்டீசில் அவருடைய போட்டோ ஒட்டப்படவேண்டிய இடத்தில் புகைப்படம் கிடைக்கவில்லை என்றுள்ளது.லஷ்கர் தய்யிபாவுடனோ அல்லது ஜமா அத்துதாஃவுடனான தொடர்பு பற்றி எந்த குற்றச்சாட்டும் அதிலில்லை.லக்விக்கெதிரான நோட்டீசிலும் அவருடைய போட்டோ ஒட்டப்படவில்லையெனினும் அவரைப்பற்றிய விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மும்பை தாக்குதலுடன் தொடர்புப்படுத்தி கைதுச்செய்யப்பட்ட அஜ்மல் கஸப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹாஃபிஸ் சயீத் மற்றும் லக்வியைப்பற்றிய முழு விபரங்களையும் இண்டர்போலுக்கு அளித்ததாக சி.பி.ஐ கூறியிருந்தது.இருவருக்கெதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கமிட்டி வெளியிட்ட விபரங்களும்,புகைப்படமும் இண்டர்போலுக்கு அளிக்கப்பட்டதாக சி.பி.ஐ கூறியுள்ளது.கஸாப் அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் ஒரு ஹாபிஸ் சாப் பற்றியும்,ஒரு செய்யித் பாய் பற்றியும் கூறியிருந்தார்.இதனடிப்படையிலேயே இண்டர்போல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.சி.பி.ஐ அளித்த இதர விபரங்களை ஏன் இண்டர்போல் வெளியிடவில்லை என்ற விபரம் தெளிவாக்கப்படவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.