28/8/09

குவாண்டானாமோ சிறையின் வயது குறைந்த கைதியாகயிருந்த ஜவாத் சட்டநடவடிக்கைக்கு தயாராகிறார்

0 கருத்துகள்
காபூல்:குவாண்டானாமோ வெஞ்சிறையில் மிகவும் வயதில் குறைந்த கைதியாக இருந்த முஹம்மது ஜவாத் அமெரிக்காவிற்கு எதிராக சட்டநடவடிக்கைக்கு தயாராகிறார்.இந்த வார துவக்கத்தில்தான் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்ட ஜவாத் ஆப்கானிஸ்தானிலிலுள்ள தனது குடும்பத்தினருடன் இணைந்தார்.
2002 ஆம் ஆண்டு ஜவாதிற்கு 12 வயதாக இருக்கும்பொழுதுதான் அமெரிக்க ராணுவத்தினர் மீது குண்டுவீசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஜவாத் குவாண்டனாமோ சிறையில் அநியாயமாக அடைக்கப்பட்டார்.கடந்த 8 ஆண்டுகளாக ஜவாத் குவாண்டனாமோவில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தினருக்கு எதிராக ஜவாத் குண்டுவீசியதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஏற்கமுடியாது என்று 2008 ஆம் ஆண்டில் அமெரிக்க ராணுவ நீதிபதி தெளிவுப்படுத்தியிருந்தார்.ஜவாதிற்கெதிராக அமெரிக்க ராணுவம் சாட்டிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் அநீதியானதும்,தவறுகள் நிறைந்ததும் என்று கூறி அமெரிக்க மாவட்ட நீதிபதி எலன் ஹுவெலெ ஜவாதை கடந்த மாதம் விடுதலைச்செய்தார்.
அமெரிக்க நீதி மன்றத்தில் ஜவாதிற்கு நஷ்டஈடு கேட்டு வழக்கு பதிவுச்செய்திருந்தபோதிலும் ஜவாதிற்கு இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்று ஜவாதின் வழக்கறிஞர் எரிக் மோண்டோல்வா கூறினார்.ஜவாதை அவருடைய சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப கொண்டுவருவதற்கு அமெரிக்க,ஆப்கானிஸ்தான் அரசுகள் உதவவேண்டுமென்றும் எரிக் கோரிக்கை விடுத்துள்ளார்.இதற்கிடையே ஜவாத் கைதுச்செய்யப்பட்டபோது அவருக்கு17 வயதாகியிருந்ததாக பெண்டகன் கூறியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.