28/8/09

ஆப்கானில் நான்கு நேட்டோ படையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்

0 கருத்துகள்
காபூல்:ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு படையினருக்கு எதிரான பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்திய போராளிகள் நேற்று முன் தினம் நடத்திய குண்டுவெடிப்பிலும்,துப்பாக்கி சூட்டிலும் 4 நேட்டோ படையினரை கொன்றனர்.
இதில் மூன்று அமெரிக்க ராணுவத்தினரும், ஒரு பிரிட்டீஷ் ராணுவத்தினரும் அடங்கும். ராணுவத்தினரின் மரணத்தை நேட்டோவும், அமெரிக்க ராணுவ அதிகாரியும் உறுதிச்செய்துள்ளனர்.ஆனால் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு ஆளாக்கப்பட்டு 8 வருடங்கள் முடியுறும் வேளையில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு அதிகம் இழப்பு ஏற்பட்டது இம்மாதத்தில்தான். இம்மாதத்தில் மட்டும் 44 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலின்போதும் பிறகும் தாலிபான் போராளிகளின் பதிலடி தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்ப்போது 60 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.2009 ஆண்டில் மட்டும் 297 ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் 174 பேர் அமெரிக்க ராணுவத்தினர்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில்தான் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படையினர் ஆப்கானிஸ்தானில் போராளிகளின் கடுமையான தாக்குதலை சந்தித்து வருகின்றனர்.அதே வேளையில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினரின் ஹெலிகாப்டர்கள் ஒரு மருத்துவமனையின் மீது நடத்திய தாக்குதலில் 12 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் காயமடைந்த தாலிபான் தலைவர்களில் ஒருவரை சிகிட்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரும்பொழுது இந்த தாக்குதலை நடத்தியதாக நேட்டோ அறிவித்துள்ளது.போராட்டம் 6 மணிநேரம் நீண்டதாகவும் அதில் 12 பேர் கொல்லப்பட்டு 6 பேர் கைதுச்செய்யப்பட்டதாகவும் மாகாண அதிகாரி கூறுகிறார்.அதிபர் தேர்தல் நடைபெற்றபோது நட்த்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த தாலிபான் தலைவர்களில் ஒருவர் சிகிட்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுவரும்போதுதான் இத்தாக்குதலை ஆக்கிரமிப்பு படையினர் அபாச்சி ஹெலிகாப்டர்கள் மூலம் நடத்தினர்.இதில் மருத்துவமனையின் கட்டிடம் சேதமடைந்துள்ளது.பதிலுக்கு தாலிபான் போராளிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினரில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.