29/6/09

மாவோயிஸ்டுகள் எங்கிருந்து வருகிறார்கள்?- அஜித் ஸாஹி(எடிட்டர் அட் லார்ஜ், டெஹல்கா)தற்ப்பொழுது எல்லோருடைய கண்களும் உற்று நோக்குவது மேற்கு வங்காளம் லால்கரில் ராணுவ நடவடிக்கைகளை. காவல்துறையும்,துணை ராணுவப்படையினரும் லால்கரில் மாவோவாதிகளை துரத்துவதை காணும்பொழுது இந்திய நகரங்களில் வசிப்பவர்களும்,ஆங்கிலம் பேசும் மத்திய தர வர்க்கமும் மகிழ்ச்சியடைகிறார்கள்.அதே நேரத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நக்ஸல்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் ஏன் தோல்வியடைகின்றன என்பதைப்பற்றி எவரும் கேள்விக்கேட்பதில்லை.ஜார்கண்டிலும், சத்தீஸ்கரிலும் டெஹல்காவிற்காக புலனாய்வு செய்தி அறிக்கையை அளித்த எனக்கு இந்த மாநிலங்களில் அரசுகள் முழு அளவில் தோல்வியை தழுவியிருக்கின்றன.என்பதை உறுதியாக கூற இயலும்.
இந்த இரண்டுமாநிலங்களிலும் நடப்பது ஒருதலைபட்சமான போர்.ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதைப்பற்றி நீங்கள் எவரும் பத்திரிகைகளில் படித்திருக்கமாட்டீர்கள்.கடந்த ஜனவரி முதல் இந்த இரண்டு மாநிலங்களிலும் பல முறை நான் சென்றிருக்கிறேன்.இங்குள்ள நக்ஸல்களால் பாதிப்படைந்த பிரதேசங்களில் எத்தனையோ மணி நேரங்கள் பயணம் செய்திருக்கிறேன். சத்தீஷ்கரில் தெற்கு பஸ்தர் பழங்குடி மக்கள் வாழக்கூடிய மாவட்டங்களான தந்தேவாடா,பிஜாபூர் ஜார்கண்டில் லதேஹர் இப்பிரதேசங்களிலெல்லாம் எங்கு அரசு நிர்வாகம் இயங்குகிறது?,எங்கு காவல்துறை செயல்படுகிறது? அப்படியொன்றே கிடையாது என்பதுதான் நிதர்சனம்.கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நான் லதேஹரில் இருந்தேன்.சி.ஆர்.பி.எஃபால் 5 நிரபராதிகளான கிராமவாசிகளை சுட்டுக்கொன்றதைக் கண்டித்து மாவோயிஷ்டுகள் பந்த் அறிவித்திருந்த தினம் அது.குறைந்தபட்சம் 10 மணி நேரமாவது நான் அந்த பகுதிகளில் சஞ்சரித்திருப்பேன்.எந்த போலீஸ்காரரையும் காணமுடியவில்லை.இதற்கிடையில் போலீஸ் வாகன அணிவகுப்பை எங்கு காண இயலும்?.சில மணி நேரங்களுக்கு பிறகு குறைந்தபட்சம் 200 மாவோவாதிகள் ஒரு கிராம ரெயில்வே ஸ்டேசனை சுற்றிவளைத்து ஒரு ரெயிலை 4 மணி நேரம் பிடித்துவைத்திருந்தார்கள்.அப்போது எங்கிருந்தது அரசு நிர்வாகம்?.எந்த ஒரு போலீஸ்காரனையும் அந்த சுற்று வட்டாரத்திற்குள்ளேயே காணமுடியவில்லை.
இந்த இரண்டு மாநிலங்களிலும் நான் பிரயாணம் செய்யும்பொழுது ஒவ்வொருமுறையும் காவல்துறை உயர் அதிகாரிகள் எச்சரிப்பார்கள்.ஏதாவது ஆபத்தில் சிக்கினால் போலீஸ் காப்பாற்றும் என்ற எதிர்ப்பார்ப்பு வேண்டும் என்று.ஆனால் நான் என்னுடைய சொந்த உத்தரவாதத்தோடுதான் பிரயாணம் செய்வது. இந்த வருடம் குடியரசு தினமன்று நான் சத்தீஷ்கரின் தெற்குப்பகுதிகளிலிருந்தேன்.அப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் கறுப்பு தினம் கடைப்பிடித்தார்கள்.ஆனால் இதற்கு முன்பு ஒருபோதும் இப்பகுதி மாவோவாதிகளின் கைகளிலில்லை.ஆனால் தற்போது மாவோவாதிகளின் கைகளில்.ஒரேயொரு காவல்துறை அதிகாரியை மட்டும்தான் நான் அந்த பிரதேசத்தில் பார்த்தேன்.துணிச்சல்காரனான அவர் மாவோயிஸ்டுகள் ஏற்படுத்திய தடைகளை சாலைகளிலிருந்து அகற்றிக்கொண்டிருந்தார். மீதமுள்ள அனைத்து காவலர்களும் காவல்நிலையத்தில் பாதுகாப்புடன் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அப்பகுதிகளுக்கு வருவதேயில்லை என்று நான் கூறவில்லை.மாறாக அவர்களுக்கு ஓரிடத்திலும் ஒரு கட்டுப்பாடில்லை.வாகன அணிவகுப்புடன்தான் அவர்கள் செல்வதெல்லாம்.போகிற போக்கில் அப்பாவிகளை சுட்டுக்கொல்வதிலும் தொந்தரவுச்செய்வதிலும் அவர்களுக்கு தயக்கம் இல்லை.பலமுறையும் அவர்கள் கிராமங்களை தீக்கிரையாக்குவார்கள்.அது முடிந்தவுடன் மீண்டும் காவல்நிலையங்களுக்கு திரும்பிச்செல்வார்கள்.இதுதான் உண்மை.சட்ட-ஒழுங்கை நிலை நாட்டுவதில் காவல்துறையினருக்கு ஒரு பங்குமில்லை.அதனால் இன்று அப்பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஸல்வாஜுத் என்ற படை.அப்படியானால் காவல்துறை எப்பொழுது களத்திலிறங்குகிறதோ அப்பொழுது கிராமவாசிகள் தான் காவல்துறையின் அராஜகத்திற்கு பலியாவார்கள்.அவ்வமயம் மாவோவாதிகளும் இருக்கமாட்டார்கள்.
இனி ஏன் இப்பிரதேசங்கள் மாவோவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது என்பதை நாம் பரிசோதிக்கவேண்டும்.ஏன் இவ்வளவு தூரம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் மற்றுமுள்ள அதிகாரிகளும் லால்கடின் விஷயத்தில் இவ்வளவு கவலைக்கொள்கிறார்கள்? இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையோருக்குத்தெரியும் இந்தியாவின் பல பகுதிகளும் அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இல்லையென்று.சமீபகாலம் வரை பீகாரின் பல பகுதிகளின் நிலை இவ்வாறுதான். தற்ப்பொழுதும் உத்திரபிரதேசின் பல பகுதிகளின் நிலைமையும் அதுதான்.மும்பையில் அண்டர்வேல்ட் தாதாக்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் உண்டு.அங்கு பிரவேசிப்பதற்கு எந்த காவல்துறை அதிகாரிக்கு துணிச்சல் உள்ளது.
தற்ப்பொழுது லால்கரில் ராணுவ நடவடிக்கையை முன் நிறுத்தி கேள்வி கேட்கிறேன்:ஏன் பிரதமரும்,உள்துறை அமைச்சரும்,ஊடகங்களும்,மத்திய தர மக்களும் இந்த விசாலமான பிரதேசங்களை திரும்ப கைப்பற்ற முயலவில்லை? உ.பி.யிலும் பீகாரிலும் எத்தனையோ பகுதிகள் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.அங்கெல்லாம் ஏன் ராணுவத்தை அனுப்பி வைக்கவில்லை.பதில் எளிதானது.
சத்தீஷ்கரிலும்,ஜார்க்கண்டிலும்,மேற்குவங்காளத்திலும் பெருமளவில் கனிம வளங்கள் கொட்டிகிடக்கிறது.இந்த தாது வளங்கள் அபரிதமான சொத்துக்களாகும்.அதனை கைப்பற்றுவதற்காக எத்தனை லட்சம் மக்களை அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடித்தாலும் நமது மத்திய தர வர்க்கத்தினருக்கோ பத்திரிகைகளுக்கோ ஒரு கஷ்டமுமில்லை.பத்திரிகைகள் தற்ப்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்களின் விருப்பங்களை நிறைவுச்செய்துக்கொண்டிருக்கின்றன.என்ன விலை கொடுத்தும் எந்த தகிடுதித்தங்கள் நடத்தியும் இந்த கனிம வளங்களை கைப்பற்றவேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பம்.இந்த பிரதேசங்களுக்கு நாம் செல்லும்பொழுது நமக்கு தெரியும் யார் அநியாயக்காரன் யார் இரைகள் என்பது.
அரசு நிர்வாகம்தான் இங்கு அக்கிரமமான வழிமுறைகளை பின்தொடர்கிறது என்றுநமக்குபுரியும். அரசு நிர்வாகத்தின் அனைத்து பிரிவினரும், அரசியல் வாதிகளும், நீதியை நிலை நிறுத்துபவர்களும்,அதிகாரிகளும் இதில் பங்காளிகள். உண்மையில் இங்கு பழங்குடி மக்கள்தான் இப்பிரதேசங்களில் பலியாடுகளாகிறார்கள்.அவர்களைத்தான் நாம் மாவோவாதிகள் என்று அழைக்கிறோம்.இவர்கள்தான் அநீதமான நடவடிக்கைகளால் துடைத்தெறியப்படுகிறார்கள்.எத்தனை காலம் நாம் இதனை தொடர்வோம்?.சமூக நீதிக்கு தகுதியுடையவர்களாக அல்லவா நாம் இவர்களை காண்கிறோம்.அவர்களை குற்றவாளிகளாக ஆக்கி தேசத்துரோகிகளாக சித்தரித்து அழித்துவிட நாம் தயாராகிறோம்.
ஒரு விஷயத்தை நாம் சிந்திக்கவேண்டும் அமெரிக்காவில் அதிபர் பாரக் ஒபாமா முதல் முக்கிய ராணுவ அதிகாரிகள் வரை வெளிப்படையாக கூறும் ஒரு உண்மை உண்டு, எத்தனை ராணுவ நடவடிக்கைகள் எடுத்த பிறகும், எவ்வளவுதான் ஆயுதங்களை பிரயோகித்த பிறகும் ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் எதிராளிகளை அடக்கியொடுக்கவோ, அந்நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ அவர்களால் முடியவில்லை, என்பதுதான்.அதுமட்டுமல்ல தற்போது அவர்கள் கூறுவது,"இந்த ராணுவ நடவடிக்கைகள் தீவிரவாத மிரட்டலை உலகத்தில் அதிகரிக்கச்செய்கிறது" என்று.இந்தியாவில் மத்திய தர வர்க்கமும் இந்த உண்மையை அடையாளம் காண்பது நல்லது.இல்லாவிட்டால் வரும் நாட்களில் அதிகமான பயங்கவரவாத செய்திகளை நாம் கேட்க நேரிடும்.
கட்டுரையாளர் டெஹல்காவின் எடிட்டர் அட் லார்ஜும் பிரபல பத்திரிகையாளருமான அஜித் ஸாஹி.
செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்.