29/6/09

மலேகான் குண்டுவெடிப்பு: பிரக்யாசிங்கின் கூட்டாளியின் பங்கு பற்றி தீவிர விசாரணை

புதுடெல்லி: கடந்த வியாழனன்று டெல்ஹி நந்த் நகரில் கைதுச்செய்யப்பட்ட சைலேந்திர சவுகானுக்கு மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
மலேகான் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான பிரக்யாசிங்கின் கூட்டாளிதான் சவுகான். மலேகான் குண்டுவெடிப்பில் சவுகானின் தொடர்பை விசாரிப்பதற்கு குஜராத்,மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காவல்துறை தனி பிரிவுகள் செல்ல இருக்கிறது.மலேகான் குண்டுவெடிப்பிற்கு திட்டம் தீட்டிய அபினவ் பாரத் அமைப்புடனும், விஸ்வ ஹிந்து மஹாசங்குடனும் இவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.அபினவ் பாரத்தின் உறுப்பினர் சவுகான் என்பது காவல் துறை விசாரணையில் உறுதியானது.
மலேகான் குண்டுவெடிப்பிற்கு திட்டம் தீட்டிய அந்த இயக்கத்தின் தலைவர்களோடு சவுகான் தொடர்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.மலேகான் குண்டுவெடிப்பில் பிரக்யாசிங் கைதுச்செய்யப்படும்வரை அவரோடு சவுகான் தொடர்பிலிருந்தார்.ஏராளமான வழிப்பாட்டுத்தலங்களின் மீது தாக்குதல் நடத்தியதில் சவுகானுக்கு பங்குண்டு என்ற விபரம் காவல்துறைக்கு கிடைத்துள்ளது.அபினவ் பாரத் என்ற அமைப்பு மட்டுமல்லாமல் விஸ்வஹிந்த் மஹா சங்கென்ற அமைப்பையும் சவுகான் சொந்தமாக துவக்கியிருந்தார்.
மலேகான் குண்டுவெடிப்பில் வெடிக்குண்டு தயாரித்தவர்களோடு சவுகானுக்கு தொடர்பிருப்பதால் இவருக்கு வெடிக்குண்டு தயாரிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும் என்று காவல்துறை கருதுகிறது.இவரைப்பற்றிய விபரங்களை குஜராத்,மஹாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையினருக்கு அளிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
news source:thejas malayalam daily