27/6/09

பீமாப்பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உள்துறை அமைச்சர் வீட்டை சோதனையிட நீதி மன்றம் உத்தரவு


திருவனந்தபுரம்:கேரள மாநிலம் பீமாப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக கேரள மாநில உள்துறை அமைச்சர் கோடியேரி பாலகிருஷ்ணன், டி.ஜி.பி ஜேக்கப் புணூஸ் ஆகியோரின் வீடுகளை சோதனைச்செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டது.

சப்-கலெக்டரின் உத்தரவின் பேரிலேயே இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூற ஏற்பாடுச்செய்த போலி ரேகைகளும் அவற்றை உருவாக்க உபயோகித்த பொருள்களையும் மேற்கண்ட இருவருடைய வீடுகளிலிருந்து கண்டெடுத்து நீதி மன்றத்தில் ஆஜராக்க திருவனந்தபுரம் ஜூடிஸியல் முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட் எம்.எம்.பஷீர் உத்தரவிட்டார்.

கடந்த மே 17 அன்று பீமாப்பள்ளியில் கேரள காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் மரணிக்கவும், ஏராளமானோருக்கு காயம் ஏற்படவும் செய்த இந்த கொடூர நிகழ்விற்கு முன் மாநில ஸ்பெஷல் பிராஞ்சும், உளவுத்துறையும் அளித்த தகவல்களை புறக்கணித்துக்கொண்டு நடத்திய கொடூரத்துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னர் சப்-கலெக்டரின் உத்தரவின் அடிப்படையிலேயே இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறி போலி ரேகைகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில்தான் நீதிபதி மேற்க்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.

உளவுத்துறை டி.ஜி.பி சிபி மாத்யூவிடம் இந்த சோதனையை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.இத்துடன் பூந்துறை காவல்நிலைய ரேகைகள்,முன்னாள் வட்டார ஆய்வாளர் பிரதீப் குமார், துணை ஆய்வாளர் ஆகியோரின் பாக்கெட் டயரி,நோட் புத்தகங்கள் மற்றும் ஆயுத பதிவேடு ஆகியவற்றை நீதிமன்றத்தில் ஆஜராக்க தற்போதைய பூந்துறை வட்டார காவல்நிலைய ஆய்வாளருக்கும் உத்தரவிட்டார். நெய்யாற்றின்கரையைச்சார்ந்த வழக்கறிஞர் பி.நாகராஜ் என்பவர்தான் இந்த பொதுநல வழக்கைத்தொடர்ந்தவர்.

செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்