26/6/09

யூத நாட்டை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.-ஹமாஸ் அறிவிப்பு


ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவரான ஃஹாலித் மிஸ் அல் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் யூதர்களுக்கான தனி நாடு என்ற கோரிக்கையை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.ஆனால் அதே சமயம் இரண்டு நாடு என்றக்கொள்கையை ஆதரிக்கவேண்டுமானால் 1967 ஆம் ஆண்டிருந்த எல்லைகளடங்கிய கிழக்கு ஜெருஸலத்தை தலைநகராகக்கொண்ட ஃபலஸ்தீன் நாடு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றார் அவர்.


மேலும் அவர்கூறுகையில்,"நாங்கள் மீண்டும் மீண்டும் யூதர்களுக்கான தனி நாடு என்றக்கொள்கையை மறுக்கிறோம்.மேலும் எங்களின் இந்த கொள்கையை கைவிட அன்புக்கட்டளை போடப்பட்டாலும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என எச்சரிக்கிறோம்.இஸ்ரேல் தலைவர்களின் யூத நாடு என்ற கோரிக்கை இனவெறிக்கான அழைப்பு.இவர்களின் கோரிக்கைக்கும் நாஜிக்களின் கோரிக்கைக்கும் எந்த வேறுபாடுமில்லை.இவர்களின் கோரிக்கையை சர்வதேச சமூகம் பகிரங்கமாக கண்டிக்க முன்வரவேண்டும்.தரை,கடல் மற்றும் வான் வழிகளை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம் என்று நெதன்யாகு கூறுவது அவர்களது சபலப்புத்தியைக்காட்டுகிறது.இது நிச்சயமாக நாடாக இருக்காது மாறாக பெருந்திரள்க்கொண்ட சமூகத்திற்கு சிறையாகவே இருக்கும்.எங்களை ஈரானும்,சிரியாவும் ஆதரிக்கிறது.சர்வதேச சட்டங்களை தொடர்ந்து நிந்தித்துவரும் இஸ்ரேலின் அடாவடித்தனத்திலிருந்து ஃபலஸ்தீன் தேசத்தை மீட்டெடுக்க ஆயுதவழி போராட்டத்தை வேறு வழியில்லை.இதைத்தவிர மாற்று வழி வேறு இல்லை.அமைதியானப்போராட்டம் என்பது சிவில் உரிமைகளை பெறுவதற்குதான் உதவுமேதவிர ஆயுதப்பாணிகளான ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க்க உதவாது.


ஒபாமாவின் புதிய அணுகுமுறையை வரவேற்கிறோம்.இது எந்தவொரு நிபந்தனையில்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முதல் படி.ஒபாமாவின் பேச்சு செயலுக்கு வரவேண்டும்.ஏனெனில் காஸ்ஸாமுனையில் ஃபலஸ்தீனிகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகிவருகிறார்கள்.ஃபதஹ் தலைவர் மஹ்மூத் அப்பாஸுடனான பேச்சுவார்த்தையில் நம்பிக்கையோடிருக்கிறோம்.ஃபதாஹுடனான பேச்சு வார்த்தை வருகிற ஞாயிறன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொடரும்.


மேற்குகரையில் ஃபலஸ்தீன் படைகளுக்கு பயிற்சி அளிப்பதை கண்காணித்து வரும் அமெரிக்க பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெஃப்டினன்ட்.கீத் டெய்டனை உடனே வெளியேற்ற வேண்டுமென்று ஒபாமாவை கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.டெய்டனின் குழு ஃபலஸ்தீன் படைகளுக்கு மேற்கு கரையின் 4 முக்கிய நகரங்களில் பயிற்சி அளிக்க இஸ்ரேல் சுய உரிமையை வழங்கியுள்ளது.இதனை இஸ்ரேல் மற்றும் ஃபலஸ்தீன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேல் ஒரு அறிக்கையில் ஃபலஸ்தீன் படைகள் தங்களது நடவடிக்கைக்கான நேரத்தை அதிகரிக்கலாம்.ஆனால் மேற்குகரையின் நகரங்களில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து செயல்படும் என்று அழுத்தம் திருத்தமாகாக கூறியுள்ளது.இஸ்ரேல் ஏற்கனவே மேற்குகரையில் 3 நகரங்களில் ஃபலஸ்தீனிய படைகளின் பாதுகாப்புக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தியுள்ளது.இஸ்ரேலின் இந்த நடவடிக்கை இந்த நகரங்களிலிருந்து இஸ்ரேலிய படைகள் முழுவதும் வெளியேறுவதை தடுத்து நிறுத்துகிறது.


News source:Al jazeera