27/6/09

மைக்கேல் ஜாக்ஸன்:வண்ணகரமான வாழ்க்கை, எதிர்பாராத மரணம்

பாப் இசை உலகின் மன்னனும் விவாதங்களின் தோழனுமாகிய மைக்கேல் ஜாக்ஸன் சர்ச்சைக்குரிய தனது வாழ்க்கை நிகழ்வுகளைப்போலவே மரணத்திலும் புதிர்களை உருவாக்கிவிட்டு விடைப்பெற்றுவிட்டார்.
வாழ்க்கையில் ஏற்பட்ட சோக நிகழ்வுகளையும்,துக்கங்களையும் இசையால் மாற்ற முற்பட்ட ஜாக்ஸன் மீண்டுமொரு வருகைக்கு திட்டமிட்டபொழுதான் எதிர்பாராத சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்துவிட்டார்.இசையுலகமும் ஜாக்ஸனும் மிகவும் எதிர்பார்த்திருந்த புதிய ஆல்பத்தின் தொடர் வெளியிடுவதற்கு இன்னும் ஒரு வாரமே மீதமிருந்தது.
அராஜகங்கள் நிறைந்த வாழ்க்கைமுறைகளும்,உடல் அழகை அதிகரிக்க நடத்திய சிக்கலான அறுவைசிகிட்சைகளும் ஜாக்ஸனின் 50 வயதிலேயே மரணத்திற்கு காரணமானதாக கருதப்படுகிறது.எப்பொழுதும் இசை ரசிகர்களுக்கும் ஊடகங்களுடனும் இருந்த ஜாக்ஸன் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்தார்.மயக்க மருந்து உபயோகம்,திருமணங்கள்,சொந்த குழந்தையை மாடியிலிருந்து கீழ தள்ளி கொல்ல முயற்சி என ஜாக்சனின் வாழ்க்கை நிகழ்வுகள் பத்திரிகைகளின் சூடான செய்திகளானது.

இறுதியில் அவருடைய மரணமும் உலக பத்திரிகைகளின் தலைப்புச்செய்தியாக மாறியது.மரணச்செய்தியை அறியவும்,அனுதாபங்களை தெரிவிக்கவும் நெட்வொர்க்கில் ஏற்ப்பட்ட நெரிசல் இணையதள செயல்பாட்டையே பாதித்தது.
1958 ஆகஸ்ட் 29-இல் அமெரிக்காவின் இன்டியானா காரியில் பிறந்த ஜாக்ஸன் அவருடைய குடும்பத்தின் 9 பேரில் 7-வது நபர்.தனது சகோதரர்களுடன் இணைந்து ஜாக்ஸன் - 5 என்ற குரூப்பிற்காகத்தான் ஜாக்ஸன் முதன்முதலாக மேடையேறினார்.1980களில் தான் ஜாக்ஸன் பிரபலமானார்.ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் 75 கோடி இதுவரை விற்றுதீர்ந்துள்ளது."திரில்லர்" என்ற ஆல்பத்தின் 65 லட்சம் காப்பிகளை அவருடைய ரசிகர்கள் வாங்கியுள்ளனர்.டேஞ்சரஸ்(29 லட்சம்),பாட்(28 லட்சம்),ஆஃப் தி வால்(19 லட்சம்),ஹிஸ்டரி(18 லட்சம்),இன்விஸிபிள்(8 லட்சம்)ஆகிய ஆல்பங்கள் இறங்கிய உடனே வேகமாக விற்றுதீர்ந்தது.13 கிராமி விருதுகள் பாடகரும், நடனக்கலைஞருமான ஜாக்சனின் வாழ்க்கைக்கு அழகு சேர்த்தது.ஜாக்ஸனின் "மூன் வாக்","டாண்ஸ்" என்பவை மிகப்பிரபலமானது.

1994-இல் எல்விஸ் பிரஸ்லியின் ஒரே மகளை திருமணமுடித்த ஜாக்ஸன் 1996-இல் விவாகரத்து செய்தார்.அதே ஆண்டில் டெப்பி ரோவியை திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளின் தந்தையானார்.1999-இல் இந்த திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.பின்னர் ரகசிய உறவின் மூலம் ஒரு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.பிரின்சு மைக்கேல் - 1, பாரிஸ் மைக்கேல்,பிரின்சு மைக்கேல் - 11 என்ற குழந்தைகளுடனான இவருடைய நடவடிக்கையும் சர்ச்சையானது.
பின்னர் வாழ்க்கையில் நடந்த கறுப்பு அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று தனது பெயரை மீக்காயீல் என மாற்றினார்.லண்டனில் அடுத்த மாதம் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுச்செய்து 75 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்ற நிலையில் தான் உலகம் போற்றிய எக்காலத்திற்கும் மிகச்சிறந்த பாப் இசை நாயகனின் வாழ்க்கைக்கு திரைவிழுந்தது.
news source:thejas malayalam daily