துபாய்: செலவுகள் எக்குத்தப்பாக அதிகரிக்கவே ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் என்டிடிவி அரேபியா டிவி சானல் மூடப்படுகிறது.இனி ரம்ஜானுக்குப் பின்னரே மீண்டும் ஒளிபரப்பைத் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத என்டிடிவி அரேபியா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏற்கனவே பலரை வேலையை விட்டு நீக்கி விட்டனர்.
மிச்சமிருப்போரும் கூட விரைவில் நீக்கப்பட்டு விடுவார்கள் எனத் தெரிகிறது.பெரும்பாலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. பெருமளவில் செலவுகள் அதிகரித்ததே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்றார்.தற்போது என்டிடிவி அரேபியாவின் நிகழ்ச்சிகள் டெல்லியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியே சேனலின் சிக்கலுக்குக் காரணம் என்கிறார்கள். 8 முதல் 10 மில்லியன் டாலர் பணம் கிடைத்தால்தான் சேனலைக் காப்பாற்ற முடியுமாம்.
ஆசியாவின் மிகப் பெரிய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் என்டிடிவி. பிரனாய் ராய் உருவாக்கிய இந்த சேனல் தற்போது என்டிடிவி இந்தியா, என்டிடிவி 24x7, என்டிடிவி புராபிட் உள்ளிட்ட சானல்களை இந்தியாவிலும், மலேசியாவில் அஸ்ட்ரோ அவனி என்ற சானலையும் வைத்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் என்டிடிவி அரேபியாவைத் தொடங்கியது.
நன்றி : thatstamil