22/6/09

நவீன ஈரானின் எதிர்காலத்தை தீர்மானிப்போர் இவர்கள்

நவீன ஈரானின் எதிர்காலத்தை தீர்மானிப்போர் இவர்கள் அமெரிக்கா- சியோனிஸ்ட் நிர்பந்தம் மற்றும் தலையீடு காரணமாக உள் நாட்டுகுழப்பத்தை நோக்கிச்செல்லும் ஈரானின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பத்துபேர் இவர்கள்:

1.ஆயத்துல்லா அலி காம்னி:விலாயத்தே ஃபகீஹ் என்ற உயர் பதவியில் இருக்கும் எல்லோராலும் ஆதரிக்கப்படும் மார்க்க அறிஞர்.இமாம் கொமைனியின் மரணத்திற்கு பிறகு விலாயத்தே ஃபகீஹாஹ பதவியேற்ற காம்னி மிதவாதி என்றாலும் ஈரானின் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுத்தல் என்ற பேச்சுக்கே இடமளிக்காதவர்.
2.மஹ்மூத் அஹ்மத் நிஜாத்:பொறியலில் டாக்டரேட் முடித்த நிஜாத் மேற்கத்தியவாதிகளின் எல்லா எதிர்பார்ப்புகளையும் தகர்த்தெறிந்துவிட்டு மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈரானின் ஏழைமக்களோடு மிக நெருக்கமாக இருக்கும் நிஜாத் தனது சொந்தவாழ்க்கையை எளிமையாக கழிப்பவர்.நகரவாசிகளான மேற்கத்திய சிந்தனையுடையவர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் நிஜாத் இன்று உலக அரங்கில் தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.
3.ஆயத்துல்லாஹ் அலி அக்பர் ஹசிமி ரப்ஸஞ்சானி:பிஸ்தா மன்னன் என்று கூறப்படும் இவரின் குடும்ப ஊழல் கடந்த தேர்தலில் முக்கிய பிரச்சனையானது.விலாயத்தே ஃபகீஹை கூட மாற்றும் அதிகாரம் படைத்த சபையின் தலைவர்.அமெரிக்காவோடு ரகசிய தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு.
4.முஹம்மது காத்தமி:நவீனவாதி என்று வாதிக்கப்படும் ஈரானின் முன்னாள் அதிபரான இவருடைய ஆட்சிகாலத்தில் எந்தவொரு நவீனப்படுத்தலுக்கும் முயற்சி எடுக்கவில்லை.காரணமாக இவர்கூறியது அதிபர் பதவியின் அதிகாரம் ஒரு எல்லைவரைக்கும்தான் என்று.
5. அலி லிர்ஜானி:ஒரு பிரபல ஆயத்துல்லா என்றழைக்கப்படும் ஒரு மார்க்க அறிஞரின் மகனான இவர் மஜ்லிஸ் என்றழக்கப்படும் பாரளுமன்ற சபாநாயகராக இருக்கிறார்.நிஜாதுடன் பகைக்கொண்டவர் இவர் என்று மேற்கத்திய ஊடகங்கள் கூறுகின்றன.
6.ஜனரல்.முஹம்மது அலி ஜாஃபரி:ஈரான் புரட்சிப்படையின் கமான்டரான இவர் காம்னியின் விசுவாசத்திற்கு பாத்திரமானவர்.கொரில்லா போரில் திறமையுடைய இவர் இஸ்ரேலின் தாக்குதல்களை தடுப்பதில் வல்லவர் என்று கூறப்படுகிறார்.
7.மீர் ஹுசைன் மூசாவி:ஈராக் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபொழுது ஈரானின் பிரதமராக இருந்தவர்.நிஜாதைப்போலவே இஸ்லாமியபுரட்சியின் வாரிசான மூசாவி தற்ப்போது நிஜாதை எதிர்த்து தன்னை நவீனவாதியாக காட்டிக்கொள்கிறார்.நகரவாசிகளும் மதசார்பற்றவர்களும் சுதந்திரத்தின் பிம்பமாக மூசாவியை புகழ்கிறார்கள்.
8.முஹம்மது ஃபாகிர் ஃகலீஃபா:தெஹ்ரானில் மேயராக இருக்கும் ஃகலீஃபா புரட்சிப்படையின் கமான்டராக இருந்தவர்.2013-இல் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் எனக்கூறப்படுகிறது.
9.ஆயத்துல்லா அஹ்மத் ஜன்னத்தி:83 வயதான இவர் அதிபர் நிஜாதின் முக்கிய ஆலோசகர்.கார்டியன் கவின்சிலின் உறுப்பினரான இவர் ஈரான் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறார். அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் மத்தியகிழக்கின் குழப்பங்களுக்கு காரணம் என வாதிப்பவர்.
10. முஹ்சின் ரஸாயி:புரட்சிப்படையின் முன்னாள் கமான்டரான இவர் ஆயத்துல்லா காம்னியின் ஆலோசகர்.

News Source:Thejas Malayalam Daily.