30/6/09

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியல்:முன்னணியில் ஈராக்,ஆஃப்கானிஸ்தான்,பாகிஸ்தான்

பாதுகாப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் உலகத்தில் மிகவும் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிப்பால்

பாதிக்கப்பட்ட ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முக்கிய இடத்தை பெறுகின்றன.
ஃபாரின் பாலிஸி என்ற மாத இதழும், ஃபண்ட் ஃபார் பீஸ் என்ற சுதந்திர ஆய்வுக்குழுவும் இணைந்து ஆண்டுதோறும் தோல்வியடைந்த நாடுகளை தேர்ந்தெடுக்கின்றன.அமெரிக்காவின் தலையீட்டினால் பாதிப்படைந்த சோமாலியாதான் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. ஜிம்பாப்வே,சூடான்,சாட்,கோங்கோ ஆகிய நாடுகள் அதற்கடுத்த இடங்களை பெறுகின்றன.ஈராக்கிற்கு 6-வது இடமும், ஆஃப்கானிஸ்தானிற்கு 7-வது இடமும், பாகிஸ்தானிற்கு 10-வது இடமும் பட்டியலில் கிடைத்திருக்கிறது.
மக்கள் தொகை, அகதிகள், வாழ்க்கைப்பிரச்சனைகள், பொருளாதார வீழ்ச்சி, சட்ட-ஒழுங்கில் வீழ்ச்சி, மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சனைகளின் அடிப்படையில் 5-வது முறையாக தோல்வியடைந்த நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
177 நாடுகளை ஆய்வுக்குட்படுத்தியதில் இந்தியாவுக்கு 87-வது இடம்.அண்டை நாடுகளான இலங்கைக்கு 12-வது இடமும்,பங்களாதேஷுக்கு 19-வது இடமும்,நேபாளம் 25-வது இடத்தையும் பிடித்துள்ளன.பட்டியலில் கடைசி 10 இடங்களில் நார்வே,பின் லாந்து, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, டென்மார்க், நியூஸி லாந்து,ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகியவை உள்ளன. கடந்த முறை சுட்டிக்காட்டப்பட்ட வளர்ச்சி சம்பந்தமான பிரச்சனைகளில் இந்தியாவுக்கு போதுமான முன்னேற்றம் ஒன்றும் அடைய முடியவில்லை என்று மேற்க்கண்ட ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.
News Source: Thejas Malayalam Daily.