24/6/09

அமெரிக்காவின் அடாவடி: ஏவுகணைத்தாக்குதலில் வசீரிஸ்தான் பொதுமக்கள் 91 பேர் மரணம்




தெற்கு வசீரிஸ்தான் கோத்திர பகுதியில் அமெரிக்க ஆதரவோடு பாகிஸ்தான் கைப்பாவை ராணுவம் நடத்தும் கூட்டுக்கொலை தொடர்கிறது.அமெரிக்க ஏவுகணைத்தாக்குதலிலும், பாகிஸ்தான் விமானத்தாக்குதலிலும் நேற்றுக்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆனது.
தலிபான் பயிற்சி மையம் என்று குற்றம்சாட்டி இந்த தாக்குதல் நடைபெற்றது.ஏற்கனவே கொல்லப்பட்ட 6 பேரின் ஜனாஸா அடக்கத்தில் கலந்துக்கொண்டவர்களின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானத்திலிருந்து ஏவப்பட்ட 3 ஏவுகணைகள் தாக்கி 50 பேர் இறந்துப்போனார்கள்.
ஏவுகணைத்தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க விமானம் பறந்துச்சென்றதாக நேரடியாக பார்த்த உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.அந்த பிரதேசத்தை சார்ந்தவர்கள்தான் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கிடந்த உடல்களை மீட்டது.பாகிஸ்தான் போர் விமானங்கள் தெற்கு வசீரிஸ்தானில் நடத்திய தாக்குதலில் 35 பேர் கோல்லப்பட்டனர்.
பழங்குடியினர் வாழும் பகுதியில் அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானின் அதிகாரத்தை மீறிய செயல் என்றும் தீவிரவாதத்திற்கெதிரான போரின் வீரியத்தை குறைக்கும் என்றும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.பொதுமக்கள் அரசுக்கெதிராக திரும்பிவிடுவார்கள் என்ற காரணத்தாலேயே பாக். அரசு இவ்வாறு கூறுவதாகவும் உண்மையில் பாகிஸ்தான் அரசும் அமெரிக்காவும் சேர்ந்து உருவாக்கிய ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஆளில்லா விமானம் மூலம் இத்தாக்குதல்கள் நடப்பதாகவும் இதற்கு பின்னால் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ செயல்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்