23/6/09

மார்க்க உரிமைகளுக்காக போராடும் போலந்து முஸ்லிம்கள்


இஸ்லாமிய பெருநாட்களை கொண்டாடுவது, இஸ்லாமியச்சட்டப்படி திருமணம் செய்வது உள்ளிட்ட மார்க்க உரிமைகளை பெறுவதற்காக போலந்து நாட்டு முஸ்லிம்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களின் இத்தகைய அடிப்படை உரிமைகளை மறுக்கும் 1936-இல் இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தில் உள்ள போலந்தில் சட்டப்படி கழுத்தில் தாலிப்போன்ற ஒன்றை கட்டித்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.முஸ்லிம்களின் பெருநாள்தினங்களான ஈகைப்பெருநாள்,தியாகப்பெருநாள்களில் கட்டாயம் பள்ளிக்கூடங்களிலும், அலுவலகங்களிலும் வந்தாகவேண்டும்.இது சுதந்திரத்தின் சுவர்க்கபூமி என்றழைக்கப்படும் ஐரோப்பாவுக்கு நாணக்கேடு என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
போலந்தில் 30 ஆயிரம் முஸ்லிம்கள் உள்ளனர்.இது போலந்தின் மொத்த மக்கள் தொகையில் 0.1 சதவீதம்.முஸ்லிம்களில் பெரும்பாலோர் துருக்கி வம்சா வழியைச்சார்ந்தவர்கள்.பழைய யூகோஸ்லாவியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள்.மீதமுள்ள மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர்கள்.14-ம் நூற்றாண்டில்தான் இஸ்லாம் போலந்தில் அறிமுகமானது.
அதே சமயம்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவந்து முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்.இதற்காக அரசு அதிகாரிகள் முஸ்லிம் பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.
அறுக்கப்பட்ட ஆடு, மாடுகளை சாப்ப்பிடும் உரிமை,ஹலாலான பொருள்கள் எது என்று அறிவிப்புச்செய்யும் உரிமை ஆகியவை புதிய சட்டத்தின் வழி பெற வாய்ப்பு இருக்கிறது.
செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்.