5/6/09

கல்வித்துறையில் பின்னாடி ! தொழில் துறையில் முன்னாடியாம் ????- குஜராத் அரசு

4 கருத்துகள்
குஜராத் மாநில பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாயின. இது குஜராத் மாநில ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறமையின்மையை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது. மாநிலம் முழுவதும் 119 பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
கடந்த ஆண்டு 408 பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 359 ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 113 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற நிலையில் இருந்து இந்த ஆண்டு 119 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற மோசமான நிலையையும் அடைந்துள்ளது.
ஒருவர் கூட தேர்ச்சி பெறாத பள்ளிகள் கிராமப்புறத்தில் இருக்கக் கூடும் என்ற எண்ணத்தை தகர்த்து, அகமதாபாத் நகரில் 12 பள்ளிகள், பரோடா மற்றும் சூரத் மாவட்டங்களில் தலா 12 பள்ளிகள், பஞ்சமகால் மாவட்டத்தில் 13 பள்ளிகள் என நகர்ப்புற பள்ளிகளிலும் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.மாநிலம் முழுவதும் 1,236 பள்ளிகளில் 0 முதல் 30 சதவீத தேர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 968 ஆக இருந்தது.
தொழில் துறையில் முன்னணியில் இருக்கிறோம் என்று வாய்சவடால் விடும் நர மோடி அரசு, கல்வித்துறையில் பின் தங்கி இருப்பதன் மூலம் அதன் உண்மையான முன்னேற்றம் நன்கு வெளிப்படுகிறது. இவர்கள் பாசிசம் என்ற துறையில் மட்டுமே அபரீத வளர்ச்சிப் பெற்றுள்ளனர் என்பது உலகறிந்த உண்மை .

4 கருத்துகள்:

  • 6 ஜூன், 2009 அன்று 6:39 PM
    பாமரன் :

    மோடிய பிரதமராக்க சோ மட்டும் இல்ல, டாட்டாவும் அம்பானியும் கூட சொன்னானுக.

    குசராத்து இவன் ஆட்சியில முன்னேறுதாம். யாரு முன்னேறுகிறார்னு இதப்பாத்தா நல்லா விளங்குது.

    நாளைய நாட்டின் மைந்தர்கள், கல்வியில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    டாட்டா மூணாம் கிளாஸ் தான் படித்துள்ளதாக கேள்விபட்டுள்ளேன். அப்படின்னா, குசராத்து மக்கள எல்லாம் டாட்டாவா மாத்த மோடி பிளான் செய்திருக்காரோ என்னமோ.

    கல்வியும் மண்ணங்கட்டியும் தான். கற்பழிக்கவும் கொலை சசெய்யவும் பாமர மக்களின் சொத்துக்களை டாட்டா அம்பானி போன்று உறிஞ்சவும் தெரிஞ்சா போதும்னு மோடி நெனச்சிருக்காரோ என்னமோ?

  • 6 ஜூன், 2009 அன்று 6:41 PM
    mumtajali :

    ஆச்சியாலர்களுக்கு கொலை செய்வதர்க்கே நேரம் இல்லை கல்வியை பற்றி எப்படி சிந்திப்பார்கள்

  • 6 ஜூன், 2009 அன்று 6:41 PM
    ennaa kodumai?, :

    நரேந்திர மோடியை இந்தியாவுக்கு பிரதமராக்கனும் சோ மாரி சில பேரு சொல்லிட்டிருந்தாய்ங்க. நாடு உருப்பட்டாப்லதான்

  • 7 ஜூன், 2009 அன்று 2:15 PM
    muhsina :

    இப்படிப்பட்டவர் பிரதமரானால், குஜராத்தின் கல்வி நிலை இந்தியா முழுவதும் ஏற்பட்டால்? உலகிலேயே படிப்பறிவில்லா நாடு என்று நமது நாட்டிற்கு பெருமை[?] வந்து சேரும். அது சரி! இந்துத்துவாக்களின் ஒரே நோக்கமான முஸ்லிம்களின் கருவறுப்பு கொள்கைக்கு அறிவு எதற்கு..? ஆயுதம் போதும் என முடிவெடுத்து விட்டார்கள் போலும்!

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.