10/6/09

செச்னியாவின் போராளித்தலைவர் தூகு உமரோவை கொன்றுவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு

செச்னியா இஸ்லாமிய குடியரசின் தலைவரும் இருபது ஆண்டுகாலம் செச்சனிய போராளிகளின் நாயகனுமாகயிருந்த தூகு உமரோவை கொன்றுவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
ஆனால் உடல் ஃபாரன்சிக் லேபில் பரிசோதனை செய்த பின்னரே கொல்லப்பட்டது உமரோவ் என்பதை உறுதியாக சொல்லமுடியும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.45 வயதான உமரோவை வடக்கு காகஸஸில் நடந்த ராணுவ நடவடிக்கையின் போது கொன்றதாக ராணுவம் அறிவித்துள்ளது.இச்செய்தியை செச்சனிய போராளிகள் மறுத்துள்ளனர்.
செச்சனிய அதிபர் அஸ்லம் மஸ்கடோவ் 2007இல் கொல்லப்பட்டதை தொடர்ந்து உமரோவ் செச்சனிய தலைவரானார்.கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் உமரோவின் 5 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர் என்றும் அதில் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டு உமரோவ் தப்பித்ததாகவும் தகவல் உண்டு.இது 5-வது தடவையாக உமரோவ் கொல்லப்பட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவிக்கிறது.
2 ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு உமரோவ் சரண் அடைந்ததாக கூறினர், பின்னர் அது அவருடைய சகோதரன் என்று தெரிய வந்தது.
-- தகவல் ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்