அமெரிக்காவும் முஸ்லிம்களும் கைகோர்த்து செயல்பட வேண்டிய ஒரு புதிய உலகம்தான் என் லட்சியம் என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரும் இஸ்லாமிய நாடான எகிப்து நாட்டின் கெய்ரோ பல்கலை கழக அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரும் இஸ்லாமிய நாடான எகிப்து நாட்டின் கெய்ரோ பல்கலை கழக அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தற்பொழுது எகிப்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, முஸ்லிம்களுக்கும் அமெரிக்காவிற்கும் நிலவி வரும் நம்பிக்கையின்மை முழுவதுமாக களையப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
பல ஆண்டுகளாக அமெரிக்க மீது நிலவிவரும் நம்பிக்கையின்மை சரிசெய்யப்பட வேண்டும் என்றும், இதற்காக சம்பந்தப்படவர்கள் அனைவரும் முயற்சி செய்யவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
உலக அமைதியில் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், யூதர்கள் அனவருக்கும் பங்கு உள்ளது என கூறிய அவர், தனது உரையில் முஸ்லிகளின் புனித நூலான குர்ஆனின் கருத்துகளை மேற்கோள்காட்டினார்.
அதுவும் கடந்த பத்து ஆண்டுகளாக புஷ் நிர்வாகம் முஸ்லிம்களை முழுவதுமாக புறக்கணித்தது. இந்நிலையில் முஸ்லிம்களையும் அரவனைத்து செல்ல வேண்டும் என்ற ஒபாமாவின் குரல் முஸ்லிம் நாடுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் பெரிய ஆறுதலாக இருக்குமென அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.