அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவி னால் வெளியிட வேண்டாம் என்று தணிக்கை செய்யப்பட்டிருந்த அபூ கரீப் சிறைச்சாலை வீடியோ நாடாக் கள் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
ஈராக்கியர்களை பயங்கரமாக பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தும் வீடியோக்கள் தற்போது அமெரிக்காவெங்கும் இரகசியமாக விநியோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சித்திரவதை, துஷ்பிரயோகம், பாலியல் வன்முறை மற்றும் அது போன்ற கீழ்த்தரமான நடத்தைகளை வீடியோ நாடா பிரதிபலிப்பதாகக் கூறப்படுகின்றது.
இவற்றை வெளி யீடு செய்வதானது உலகில் ஏனைய நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவம் குறித்த பிழையான கருத்துக்களை உருவாக் குவதோடு அமெரிக்க ஜனநாயகத் திற்கும் இழுக்காக அமையும் என்று ஒபாமா இதனைத் தடுத்திருந்தார்.
அபூ கரீப் சிறைச்சாலையில் நடந்த சித்திரவதைகள் மற்றும் பாலி யல் துஷ்பிரயோகங்களை விசாரணை செய்வதற்கென்று நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அன்டோனியோ இவ் வீடியோ நாடாக்களில் ஈராக்கிய பெண்களை துஷ்பிரயோகம் செய்வது போன்ற காட்சிகள் மிகத் தெளிவா கப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பொல்லுகள், இரும்பு கம்பிகள், பாஸ்பரஸ் அடங்கிய குழாய்கள் என்பவற்றின் மூலம் அபூ கரீப் கைதிகள் தாக்கப்படும் காட்சி களும் 2000 படங்களை உள்ளடக்கிய வீடியோ நாடாக்கள் 2003 முதல் 2005 வரையான காலப் பகுதிகளுக்குள் எடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கத் துருப்பினர் ஈராக் கிய கைதிகளை தமது டிஜிடல் கெம ராக்களால் எடுத்த புகைப்படங்களை 2004ல் முதன் முதலாக பத்திரிகைக ளில் பிரசுரித்திருந்தன. அதிர்ச்சிகர மான இப்புகைப்படங்கள் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தியிருந் தது.
தற்போது ஒளிநாடாக்கள் மீண் டும் வெளிவந்துள்ளமை அமெரிக்கா வின் சர்வதேச மதிப்புக்கு மீண்டும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. சம்பந் தப்பட்டோர் தண்டிக்கப்பட வேண் டும் என்ற கோஷங்கள் வலுவாக எழுந்துள்ளன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.