1/7/09

யெமன் விமானம் கடலில் வீழ்ந்து 151 பேர் மரணம்

மொரானி:கோமரோஸ் தீவுக்கருகில் இந்தியப்பெருங்கடலில் நேற்று அதிகாலை நடந்த விபத்தில் கடலில் வீழ்ந்த யெமன் நாட்டு விமானத்திலிருந்த பயணிகள்,பணியாளர்கள் உட்பட 151 பேர் மரணமடைந்தனர்.
இதில் விமானப்பைலட் மற்றும் ஒரு 5 வயது சிறுவன் ஆகியோர் மட்டும் உயிர்பிழைத்தனர்.ஒருமாதத்திற்கிடையே கடலில் வீழும் இரண்டாவது விமானம் இது. நேற்று முன் தினம் யெமன் தலைநகரான ஸனாவிலிருந்து புறப்பட்ட விமானம் கொரோனியில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் விபத்துற்குள்ளாகி கடலில் வீழ்ந்தது. மோசமான வானிலைதான் விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. மரணித்தவர்களில் 66 பேர் பிரஞ்சு நாட்டைச்சாரந்தவர்களும் மீதமுள்ள பேர் கோமரூஸைச்சார்ந்தவர்கள். விபத்து நட‍ந்த இடத்திற்கு ராணுவ பாதுகாப்புக்குழுக்களை அனுப்பியிருப்பதாக மொரோனி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.பிரான்சு நாட்டு கப்பற்படை மீட்புப்பணிக்காக 2 கப்பல்களையும் பாதுகாப்பு படகுகளையும் அனுப்பியிருக்கிறது. கடந்த ஜூன் 1‍ம் தேதி ஏர் பிரான்சு விமானம் கடலில் வீழ்ந்தது.அதில் 228 பயணிகளிருந்தனர்.

செய்தி ஆதார‌ம்:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்.