1/7/09

ஈரான் அதிபர் மஹ்மூத் நஜாத் தான்:ஈரான் கார்டியன் கவுன்சில் அறிவிப்பு

ஈரான் இஸ்லாமிய குடியரசின் 10‍வது அதிபர் மஹ்மூத் நஜாத் தான் என்று ஈரானின் மிக உயர்‍ந்த அதிகாரம் கொண்ட‌ உயர் அமைப்பான கார்டியன் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் குலுக்கலின் மூலம் நிச்சயிக்கப்பட்ட 10 சதவீத வாக்குகளை மீண்டும் எண்ணிய பிறகுதான் நஜாதின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.தேர்தலில் மோசடி நட‍ந்ததாக குற்றஞ்சாட்டி தோற்றுப்போன எதிர்கட்சி வேட்பாளர்களான ஹுசைன் மூஸாவியும்,மெஹ்தி ஹர்ரூபியும் சமர்ப்பித்த கோரிக்கையின் அடிப்படையில் தான் 10 சதவீதம் ஓட்டுகளை மீண்டும் எண்ணப்பட்டது.
கார்டியன் கவுன்சில் செயலாளர் ஆயத்துல்லாஹ் ஜன்னத்தி உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில்தான் இம்முடிவை அறிவித்ததாக கூறப்படுகிறது. தேர்தல் முற்றிலும் உண்மையாக நடைப்பெற்றதாக இந்த கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12 ஆம் தேதி நடைப்பெற்ற தேர்தலில் நஜாத் 63 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட்ருந்தது.ஆனால் தேர்தலில் முறைக்கேடு நடந்ததாக குற்றஞ்சாட்டி மூஸாவியின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் 17 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.ஆனால் வாக்குகளை மீண்டும் எண்ணியபொழுது சில இடங்களில் நஜாதிற்கு ஏற்கனவே கிடைத்த ஓட்டுகளை விட அதிகமான ஓட்டுகள் கிடைத்துள்ளதாக பிரஸ் டி.வி தெரிவிக்கிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்