12/8/09

போலி என்கவுன்டர் சொராபுதீன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

0 கருத்துகள்
புதுடெல்லி, ஆக. 12: குஜராத் முதல்வரை கொல்ல முயன்றதாக கூறி அப்பாவியான சொராபுதீன் ஷேக் என்ற இளைஞரை போலீசார் கடந்த 2005ம் ஆண்டு போலி என்கவுன்டர் நடத்தி கொன்றனர்.
இது தொடர்பாக குஜராத் போலீஸ் உயர் அதிகாரிகள் 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தருண் சட்டர்ஜி, அப்தாப் ஆலம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சொராபுதீனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இடைக்கால இழப்பீடு தர நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
source:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.