12/8/09

ஷோபியான்:மரபணு சோதனைக்கு அனுப்பிய மாதிரிகளில் மோசடி. கொலை செய்யப்பட்ட பெண்களுடையதல்ல என்று ரிப்போர்ட்

1 கருத்துகள்
புதுடெல்லி:காஷ்மீர் பள்ளத்தாக்கை ஒருமாதத்திற்கும் மேலாக கலவரக்காடாக்கிய ஷோபியான் நிகழ்வில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட கொல்லப்பட்ட பெண்களின் மரபணு சோதனையில் மோசடி நடந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஆஸியா ஜான்,நிலோஃபர் ஜான் ஆகியவரின் உடலிலிருந்து எடுத்த மாதிரிகளை அனுப்பாமல் வேறொன்றை அதிகாரிகள் ஃபாரன்சிக் சோதனைக்கூடத்திற்கு அனுப்பியதாக கருதப்படுகிறது.
கொல்லப்பட்ட பெண்களின் மர்ம உறுப்புகளிலிருந்து எடுக்கப்பட்டதாக அனுப்பப்பட்ட திரவம் அவர்களின் இரத்த சாம்பிள்களுடன் ஒத்துப்போகவில்லை என்று சோதனைக்கூட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அதனால்தான் அனுப்பட்ட மாதிரிகள் கொல்லப்பட்ட பெண்களுடையதல்ல என்ற முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுபற்றிய விளக்கம் வரவில்லை.குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக கொல்லப்பட்ட பெண்களின் உடல்களிலிருந்து திரவ மாதிரிகளை எடுக்காமல் வேறொரு நபரிடமிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.வழக்கு விசாரணையில் மோசடி நடைபெறுவதாக ஆரம்பத்திலேயே குற்றச்சாட்டு எழுந்தது.
செய்தி:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

1 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.