18/8/09

காபூலில் நேட்டோ ராணுவமுகாம் மீது தாக்குதல்:எட்டுபேர் மரணம்

0 கருத்துகள்
காபூல்:ஆஃப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற இருக்கவே நேட்டோ ராணுவ மையத்தின் மீது தலிபான் போராளிகள் நடத்திய தாக்குதலில் எட்டு பேர் மரணமடைந்துள்ளனர்.
போலீஸ்காரர் உட்பட ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் விபரம் வெளியிடப்படவில்லை.ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினரும் கர்ஸாயியின் தேர்தல் பிரச்சார மேலாளருமான அவா ஆலம் நூரிஸ்தானியும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
ஏராளமான பாதுகாப்புகளை கடந்து ட்ரக்கில் வந்த போராளி முக்கிய நுழைவாயிலுக்கு வெறும் 30 மீட்டர் தொலைவில் வைத்து குண்டுகளை வெடிக்கச்செய்தார். கடந்த ஆறு மாதத்திற்கிடையில் நடைபெறும் மிகப்பெரியதாக்குதல் இது.
காபூல் நகரம் ஆக்கிரமிப்பு படையினரின் அதி தீவிர பாதுகாப்பால் திணரும் சூழலிலும் முக்கிய ராணுவ மையத்தின் மீது நடந்த தாக்குதல் மூலம் தங்களால் எந்த பாதுகாப்பையும் முறியடித்து தாக்குதல் நடத்த முடியும் என்ற தாலிபானின் எதிர் தரப்பினருக்கு விடும் சவலாக கருதப்படுகிறது. சீனியர் அமெரிக்க கமாண்டர் ஜெனரல் ஸ்டான்லி மக் கிரஸ்ஸலின் வசிப்பிடத்திற்கும்,அமெரிக்க தூதரகத்திற்கும் சமீபமாகத்தான் அமெரிக்க ஆக்கிரமிப்பு கூட்டுப்படை அதிகாரிகளை குலை நடுங்கச்செய்த இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.தங்களது இலட்சியம் நேட்டோ தலைமையகம் மற்றும் அமெரிக்க தூதரகமும் என்று தாலிபான் அறிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல்களை தங்களால் தடுக்க இயலாது என்று பதிலளிக்கிறார் நேட்டோ அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் இ.ட்ரம்பிளி.

மேலும் இச்செய்தி பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.