5/8/09

அஹ்ம‌த் நிஜாத் ஈரானின் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌லைவ‌ர்:அமெரிக்கா

0 கருத்துகள்

க‌ட‌ந்த‌ எட்டுவார‌ங்க‌ளுக்கு முன்பு ந‌டைபெற்ற‌ தேர்த‌லில் ஈரான் ம‌க்க‌ளின் பெரும்பான‌மையான‌ ஆத‌ர‌வோடு வெற்றி வாகை சூடிய‌ அஹ்ம‌த் நிஜாத் இன்று முறைப்ப‌டி அதிப‌ராக‌ ப‌த‌வியேற்றார்.
ஈரான் தேர்த‌ல் ந‌ட‌ந்துக்கொண்டிருக்கும் வேளையில் எதிர்க்க‌ட்சி வேட்பாள‌ரான‌ ஹுஸைன் மூஸாவிக்கு ஆதர‌வாக‌ க‌ள‌மிற‌ங்கி க‌டுமையான‌ பிர‌ச்சார‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ மேற்க‌த்திய‌ உல‌கும், மீடியாவும். அத‌னையும் மீறி அஹ்ம‌த் நிஜாத் பெருவாரியான‌ வாக்குக‌ளை பெற்று வெற்றிபெற்ற‌தும், அவ‌ர‌து வெற்றியை பொறுத்துக்கொள்ள‌ இய‌லாத‌ மூஸாவியின் மேலை நாட்டுக‌லாச்சார‌த்தை விரும்பும் ந‌க‌ர்புற‌ ஆதர‌வாள‌ர்க‌ள் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ன‌ர். இத‌னை மேற்க‌த்திய‌ மீடியாக்க‌ள் போட்டிபோட்டு உல‌கெங்கும் பிர‌ப‌ல‌ ப‌டுத்தின‌. மேற்க‌த்திய‌ நாடுக‌ள் அஹ்ம‌த் நிஜாதின் இந்த‌ அபார‌வெற்றியை ஜீர‌ண‌முடியாம‌ல் புல‌ம்பின‌.
இந்நிலையில் வாக்குப‌திவில் மோச‌டி ந‌ட‌ந்த‌தாக‌ கூற‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளில் ஈரானின் ம‌த‌த்த‌லைவ‌ர் காமினியின் உத்த‌ர‌வுப்பிர‌கார‌ம் மீண்டும் வாக்குக‌ள் எண்ண‌ப்ப‌ட்ட‌ன‌. ஆனால் இவ்விட‌ங்க‌ளிலெல்லாம் முன்பு கிடைத்த‌ வாக்குக‌ளை விட‌ அதிக‌ வாக்குக‌ளை பெற்றிருந்தார் நிஜாத். இந்த‌ முடிவையும் மூஸாவியோ மேற்க‌த்திய‌ மீடியாக்க‌ளோ ஒப்புக்கொள்ள‌வில்லை. இந்நிலையில் ஈரானின் ம‌த‌த்த‌லைவ‌ர் காமினியின் ஆணைப்ப‌டி இன்று முறைப்ப‌டி அதிப‌ராக‌ ப‌த‌வியேற்றுக்கொண்டார் அஹ்மத் நிஜாத்.ஆனால் பிரிட்ட‌ன், ஜெர்ம‌னி, பிரான்சு உள்ளிட்ட‌ எந்த‌ மேற்க‌த்திய‌ நாடுக‌ளும் ம‌ரியாதைக்காக‌ கூட‌ ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ நிஜாதிற்கு வாழ்த்து தெரிவிக்க‌வில்லை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.
ஆனால் ஈரான் தேர்த‌ல் ந‌ட‌ந்த‌திலிருந்து அதனைப்பற்றி ‌ எத‌னையும் தெளிவாக‌ கூறாம‌ல் இருந்து வ‌ருகிறார் அமெரிக்க‌ அதிபர் பார‌க் ஒபாமா. இந்நிலையில் வெள்ளைமாளிகையின் அதிகார‌ப்பூர்வ‌ செய்தித்தொட‌ர்பாள‌ர் ராப‌ர்ட் கிப்ஸிட‌ம் ச‌ர்ச்சைக்குரிய‌ தேர்த‌ல் மூல‌ம் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ நிஜாதை ஒபாமா அங்கீக‌ரிக்கிறாரா என்று கேள்வி எழுப்பிய‌பொழுது, கிப்ஸ்,"இந்த‌ தேர்த‌ல் முடிவைப்ப‌ற்றிய‌ விவாத‌ம் ஈரானில் ஈரானிய‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டுகொண்டிருக்கிற‌து. ஈரானிய‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து அதிபரை தேர்ந்தெடுத்துள்ள‌ன‌ர்.அஹ்ம‌த் நிஜாத் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌லைவ‌ர்". என்று குறிப்பிட்டார். ஆனாலும் அமெரிக்கா நிஜாதிற்கு எந்த‌ வித‌ வாழ்த்துச்செய்தியையும் எழுத்துமூல‌மாக‌ அனுப்ப‌வில்லை. இதுப‌ற்றி கேட்ட‌த‌ற்கு ராப‌ர்ட் கிப்ஸ் கூறுகையில், "வாழ்த்துக‌டித‌ம் அனுப்பாத‌துத் தொட‌ர்பாக‌ எந்த‌வித‌கார‌ண‌மும் இருப்பதாக‌ நான் ந‌ம்ப‌வில்லை".என்றார்.
News :Extracted from Presstv

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.