காஸ்ஸா:குற்றவாளிகள் என்று குற்றச்சாட்டைக் கூறி இஸ்ரேல் ராணுவம் கைதுச்செய்யப்படும் ஃபலஸ்தீன் இளைஞர்களை கடத்திச்சென்று அவர்களின் உடலிலுள்ள முக்கிய உறுப்புகளை திருடி விட்டு உடலை வழியில் எறிந்துவிட்டுச் செல்லுகின்றனர் என்ற அதிர்ச்சி செய்தியை ஸ்வீடன் நாட்டிலிருந்து வெளிவரும் நாளிதழான ஆஃப்டன்ப்ளேடட்(Aftonbladet) என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.
உடல் உறுப்புகளை திருடவும் அவற்றை சர்வதேச சந்தையில் விற்பதற்கும் மாஃபியா கும்பலுடன் இஸ்ரேல் ராணுவத்தினருக்கு தொடர்பு இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. மேற்குகரையிலிருந்தும், காஸ்ஸா முனையிலிருந்தும் கைதுச்செய்யப்படும் ஏராளமான ஃபலஸ்தீனர்களிடமிருந்து உடல் உறுப்புகள் திருடப்பட்டது ஆய்வில் உறுதிச்செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர் டொனால்ட் போஸ்ட்ரம் கூறுகிறார்.
நப்லஸிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தினரால் பிடித்துச்செல்லப்பட்ட ஃஹாலித் என்ற இளைஞனின் இறந்துப்போன உடல்தான் அவரது குடும்பத்தினருக்கு கிடைத்தது. ஜனாஸாவை குளிப்பாட்டும்போது உடலில் காணப்பட்ட வெட்டுக்காயங்களை பரிசோதித்தபொழுதுதான் உடல் உறுப்புகள் திருடப்பட்டது தெரியவந்தது. பல குடும்பங்களும் இத்தகைய சூழல் தங்களுக்கும் நேர்ந்ததை தன்னிடம் விவரித்ததாக ஆஃப்டன்ப்ளேட்டின் செய்தியாளர் கூறுகின்றார். பிலால் என்ற இளைஞரை இஸ்ரேல் ராணுவம் பிடித்துச்சென்று நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக்கொலைச்செய்தது. 5 நாள்கள் கழித்துதான் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் நடந்த உடல் பரிசோதனையில் அவருடைய வயிறு கிழிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முக்கிய உறுப்புகளெல்லாம் திருடப்பட்டிருந்தது.
1992 ஆம் ஆண்டிலேயே இஸ்ரேல் ராணுவத்திற்கெதிராக உடல் உறுப்புகளை திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதுபற்றிய தெளிவான விசாரணை அறிக்கை வெளிவரவில்லை. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாஃபியா கும்பலுடன் இஸ்ரேல் ராணுவத்திற்கு தொடர்பிருப்பதாகவும் அப்பத்திரிகை குற்றஞ்சாட்டுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.