16/8/09

ஐக்கிய அரபு அமீரகத்தில் எமிரேட்ஸ் இந்தியா பெடேர்னிடி ஃபாரம் சார்பாக "விரைவில் குணமடைய" நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

0 கருத்துகள்

இந்தியாவின் 62 வது சுதந்திரதினத்தை சிறப்பாக கொண்டாடும் முகமாக மருத்துவமனைகளில் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களின் புண்பட்ட மனங்களுக்கு பூக்கள் மற்றும் பழங்களுடன் விரைவில் குணமடைவதற்கான பிரார்த்தனையுடன் கூடிய‌ வாழ்த்து அட்டைகள் வழங்கும் "விரைவில் குணமடைய" நிகழ்ச்சியை வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சமூக நல அமைப்பான எமிரேட்ஸ் இந்தியா பெடேர்னிடி ஃபாரம் ஏற்பாடுச்செய்திருந்தது.

இந்நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 15 ஆம் நாள்) அமீரகத்தின் கீழ்க்கண்ட மருத்துவமனைகளில் சிறப்பாக நடைபெற்றது.

துபாய்:அல் பராஹா மருத்துவமனை,ராஷித் மருத்துவமனை,மெட்கேர் மருத்துவமனை ஷார்ஜா:சுலைஹா ம‌ருத்துவ‌ம‌னை,குவைத்தி ம‌ருத்துவ‌ம‌னை அபுதாபி:அல் அஹ‌லியா ம‌ருத்துவ‌ம‌னை,லைஃப் லைன் ம‌ருத்துவ‌ம‌னை. ராஸ் அல் கைமா:அல் ஸ‌க்ர் ம‌ருத்துவ‌ம‌னை அஜ்மான்:ஷைக் க‌லீஃபா பின் ஸைத் ம‌ருத்துவ‌ம‌னை அல் அய்ன்:மாட‌ர்ன் கிளீனிக்,நியூ இந்திய‌ன் மெடிக்க‌ல்,அல் வ‌க‌ர் கிளீனிக் புஜைரா:புஜைரா ம‌ருத்துவ‌ம‌னை. இந்நிக‌ழ்ச்சி ம‌ருத்துவ‌ம‌னை அதிகாரிக‌ளின் முறையான‌ அனும‌தியோடு ந‌டைபெற்ற‌து.

இந்நிக‌ழ்ச்சியில் EIFF பெண்க‌ள் அணியின‌ரும் மிகுந்த ஈடுபாட்டோடு க‌ல‌ந்துக்கொண்டு துபை அல் ப‌ராஹா ம‌ருத்துவ‌ம‌னையிலும்,அஜ்மான் ஷேக் க‌லீஃபா பின் ஸைத் ம‌ருத்துவ‌ம‌னையிலும் பெண்க‌ள் ம‌ற்றும் குழ‌ந்தைக‌ள் வார்டுக‌ளுக்கு சென்று ஆறுத‌ல் கூறி ப‌ழ‌ங்க‌ள் ம‌ற்றும் பூக்க‌ளை வ‌ழ‌ங்கின‌ர். EIFF ன் இந்நிக‌ழ்ச்சிக்கு ம‌ருத்துவ‌ம‌னை அதிகாரிக‌ளும் ஊழிய‌ர்க‌ளும் மிகுந்த‌ ஒத்துழைப்பை த‌ந்த‌தோடு உறுப்பின‌ர்க‌ளின் க‌ண்ணிய‌த்துட‌ன் கூடிய‌ க‌ட்டுப்பாட்டையும் சேவை ம‌ன‌ப்பான்மையையும் ம‌னதார‌ப்பாராட்டின‌ர்.

‌ருத்துவ‌ம‌னையிலுள்ள‌ நோயாளிக‌ளும் இந்நிக‌ழ்ச்சிக்கு மிகுந்த‌ ம‌கிழ்ச்சியை தெரிவித்த‌ன‌ர்.EIFFஉறுப்பினர்கள் தம‌க்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ ப‌ணியை வெற்றிக‌ர‌மாக‌ முடித்த‌தோடு சுத‌ந்திர‌தின‌ வாழ்த்துக‌ளையும் அனைவ‌ரோடும் ப‌கிர்ந்துக்கொண்டனர்.

‌ம‌து செய்தியாள‌ர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.