8/9/09

ஜியாவை கொன்றது அமெரிக்கா-கூறுகிறார் மாஜி ஐஎஸ்ஐ தலைவர்

0 கருத்துகள்
இஸ்லாமாபாத்: அமெரிக்காவும், அதிகாரத்தைப் பிடிக்க விரும்பிய சில பாகிஸ்தானியரும் இணைந்துதான் 1988ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜியா உல் ஹக்கை திட்டமிட்டுக் கொன்றனர் என்று கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் உளவுப் பிரிவு (ஐஎஸ்ஐ) இயக்குநரும், ஐஎஸ்ஐ முன்னாள் தலைவருமான இம்தியாஸ் அகமது கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் டிவி ஒன்றுக்கு இம்தியாஸ் அளித்துள்ள பேட்டி...
ஜியா உல் ஹக்கைக் கொல்ல பாகிஸ்தானைச் சேர்ந்த சிலருடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டது. அந்த பாகிஸ்தான் சக்திகள், அரசியல் அதிகாரத்தை ஜியாவிடமிருந்து பறிக்க விருப்பம் கொண்டிருந்தவை ஆகும். இவர்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.
ஜியா உல் ஹக் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகவில்லை, அது சதி வேலை என்று முன்னாள் ராணுவ தளபதி மிர்ஸா ஆலம் பேக்கும் கூறியுள்ளார் என்று கூறியுள்ளார் இம்தியாஸ்.
1977ம் ஆண்டு ஜூல்பிகர் அலி பூட்டோ ஆட்சியைக் கவிழ்த்து விட்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார் அப்போதைய ராணுவ தளபதியான ஜியா உல் ஹக். நாட்டில் ராணுவச் சட்டத்தையும் பிரகடனம் செய்தார்.
முதலில் ராணுவ சர்வாதிகாரியாக செயல்பட்டு வந்த அவர் பின்னர் 1978ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னை நாட்டின் ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டார்.
1988ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜியா உல் ஹக் விமான விபத்தில் உயிரிழந்தார். அது அப்போதே சதி வேலை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் ஜியா உல் ஹக்கை அமெரிக்காதான் கொன்றது என்று புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இம்தியாஸ் அகமது.
இதுகுறித்து ஜியாவின் மகன் இஜாஸ் உல் ஹக் கருத்து தெரிவிக்கையில், விமான விபத்து குறித்து முழுமையான கிரிமினல் புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
முன்னாள் பைலட் அக்ரம் அவான் என்பவர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டபோது, விசாரணையின்போது, ஜியா சென்ற விமானத்தை தகர்க்க இஸ்ரேலின் மொசாத் உபகரணங்களைக் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார். இதுகுறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை.
விமான விபத்து குறித்த விசாரணையை நடத்த விடாமல் அமெரிக்கா தடுத்து விட்டது. எனது தந்தையின் உடலில் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்களை தொலை தூரங்களுக்கு மாற்றி விட்டனர்.
விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கரை சந்தித்தேன். ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலும் இதுவரை இல்லை.
எனது தந்தையின் மரணத்தில் இன்னும் நிலவி வரும் பல மர்மங்களை அவிழ்க்க விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் இஜாஸ் உல் ஹக்.
thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.