2/10/09

உலகை மிரட்சியடைய செய்த சீனாவின் 60வது தேசிய தினம்

0 கருத்துகள்
உலகும் இந்தியாவும் உற்றுப்பார்க்கையில் தனது 60 ஆவது தேசிய தினமன்று சீனா தனது இராணுவ பலத்தை பீஜிங்கில் வெளிக்காட்டியது. இந்த இராணுவ அணிவகுப்பில் சீனாவின் அதி நவீன டாங்கிகள் மற்றும் ஏவுகணைகள் அனுவகுப்பு செய்தன.இந்த இராணுவ அணிவகுப்பு இதுவரை அந்நாடு கண்டிராத பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே நடத்தப்பட்டது.

இந்த இராணுவ அணிவகுப்பின் போது உலகம் இதுவரை கண்டிராத சீனாவின் DF-31 என்ற கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று தாக்கும் ஏவுகணையை சீனா உலகிற்கு காட்டியது. இந்த ஏவுகணை 13,000 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்க வல்லது. இது இந்தியாவின் எந்த பகுதியை மட்டுமல்ல அமெரிக்காவரை சென்று இலக்கை தாக்கும் வல்லமை படைத்தது. வல்லுனர்கள் இந்த ஏவுகணை குறித்து கூறுகையில், இந்த ஏவுகணையை எங்கிருந்தும் ஏவக்கூடிய வசதி படைத்தது. கூடவே இது அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் திறன் படைத்து, இந்த ஏவுகணைக்கு பதிலடியாக இந்தியாவிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லை என்று கூறினர்.

கூடவே தரையிலிருந்து தரை தாக்கும் திறன் படைத்த நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய DF-21 ஏவுகணையும் பங்கெடுத்தது. இந்த ஏவுகணை 3200 கிலோ மீட்டர் சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இது தான் உலகிலேயே ஒரே நேரத்தில் பல விதமான ஆயுதங்களை தாங்கிச்செல்லும் ஆற்றல் படைத்த ஒரே ஏவுகணையாகும். இந்தியாவிடம் இதற்கு பதிலாக அக்னி 3 உள்ளது என்றாலும் அது சோதனை நிலையிலேயே உள்ளது.

சீனாவின் மற்றொரு ஆயுதமான CJ-10 தரையிலிருந்து தரையை தாக்கும் திறன் படைத்து. இது 1500 கிலோ மீட்டர் தூரமுள்ள இலக்கை குறி தவறாமல் தாக்கும் திறன் படைத்தது. இது போன்ற ஏவுகணைகள் இந்தியா,ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்து சீனாவிடம் மட்டும் தான் உள்ளது. இந்த ஏவுகணை ஒலியைவிட விட வேகமாக சென்று தாக்கும் திறன் படைத்தது. மேலும் இது 500 கிலோ எடை உள்ள ஆயுதத்தை தாங்கிச் செல்லும் திறன் படைத்து. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியாவிடம் பிரமோஸ் ஏவுகணை உள்ளது. இது இதற்கு போட்டியான சீனாவின் ஏவுகணையைவிட சற்று குறைவான எடை உள்ள ஆயுதத்தையே தாங்கிச்செல்லும் திறன் படைத்திருந்தாலும் இலக்கை குறி தவறாமல் தாக்கும் திறம் படைத்தது.

இந்த ஆயுதங்களுக்கு நடுவில் சீனாவின் இராணுவ அணிவகுப்பில் பங்கெடுத்த புதியரக ஆயுதம் கப்பல்களை அளிக்கக் கூடிய ஏவுகணைகள் ஆகும். இந்த YJ-8 வரிசையில் உள்ள ஏவுகணைகள் சீன கப்பல் படையில் அங்கம் வகிக்கிறது. இது கடல்வழி ஆபத்துகளை களைவதற்காக பயன்படுத்தப் படுகிறது.

source: NDTV

வீடியோவைக் காண வீடியோ1, வீடியோ2 க்ளிக் செய்யவும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.