14/10/09

அல்பேனியா நாட்டு மக்கள் தொகையில் 80% மக்கள் முஸ்லீம்கள்

0 கருத்துகள்
2005 ல் நடத்தப்பட்டு வெளியிடப்படாத கருத்துக்கணிப்பு ஒன்று அல்பேனிய மக்கள் தொகையில் 80% மக்கள் முஸ்லீம்கள் என்று கூறியுள்ளது. இந்த சதவிகிதம் முன்பு இருந்ததை விட அதிகம்.
National Institute for Statistics 2005 ல் நடத்திய The Multiple Indicator Cluster Survey அல்பேனிய மக்களின் தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. இந்த கருத்துக்கணிப்பில் அந்த மக்களின் மதம் குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டன.மொத்தமாக 5000 குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 79.9% மக்கள் இஸ்லாமியர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 70% மக்கள் இஸ்லாமியர்கள் என்றும் 20% மக்கள் கிறித்தவர்கள் என்றும், 10% மக்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள் என்றும் கணக்கிடப்பட்டது.புதியதாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் சில மக்கள் திரானாவை மையமாக கொண்ட சியா பெக்தாசி இஸ்லாம் என்ற வழிபாட்டிலும் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தனி மதம் என்பதாகக் கூறப்படுவதால் இது இஸ்லாமிய மக்கள் தொகையில் சேர்க்கப்படவில்லை.
அல்பேனியாவில் 1967 ல் நடந்த கம்யூனிச ஆட்சியின் போது வணக்க வழிபாடுகள் தடை செய்யப்பட்டன. நவம்பர் 1990 ல் கம்யூனிசம் வீழ்ந்த போது மக்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளை பின்பற்ற தொடங்கினர். அன்றிலிருந்து அல்பேனியா இஸ்லாமிய நாடா இல்லையா என்ற விவாதம் வலுக்கத்தொடங்கியது. இப்போது கிடைத்த இந்த கருத்துக்கணிப்பு முடிவின் படி முஸ்லீம்கள் மொத்தமுள்ள 3.1 மில்லியன் மக்களில் 2.5 மில்லியன் பேர் இருக்கின்றனர். இந்த கணக்கெடுப்பு கம்யூனிசம் வீழ்ந்த பின்னர் மேற்கு ஐரோப்பாவிலிருந்து அல்பேனியாவிற்கு வந்த ஒரு மில்லியன் மக்களை கணக்கில் சேர்க்கவில்லை.
source:ABNA

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.