5/10/09

காஷ்மீருக்கு தனி தூதர்-இஸ்லாமிய நாடுகளுக்கு இந்தியா கண்டனம்

1 கருத்துகள்
டெல்லி: காஷ்மீருக்கு தனி தூதரை நியமித்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இஸ்லாமிய நாடுகளின் அரசியல், சமுதாயம் மற்றும் பொருளாதாரம் குறித்த விவகாரங்களை கவனித்து வரும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, சவுதி அரோபியாவை சேர்ந்த அப்துல்லா பின் அப்துர் ரஹ்மான் என்பவரை காஷ்மீருக்கான தனி தூதராக அறிவித்தது.
இஸ்லாமிய கூட்டமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் இது போன்ற முடிவு எடுப்பது இது தான் முதல் முறை. இதற்கு பாகிஸ்தானின் தூண்டுதலே இதற்குக் காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவு துறை அமைச்சகம் டெல்லியில் வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில்,இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு தலையிடுவது கண்டிக்கதக்கது. இதை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. அந்த தூதரின் நியமனத்தை இந்தியா நிராகரிக்கிறது.

காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி என்பதை அவர்கள் நினைத்து பார்க்க தவறிவிட்டனர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தி்ல் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலையிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஹுரியத் மாநாடு அமைப்பு தலைவர் மிர்வைஸ் உமர் பரூக் இதை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு எடுத்துள்ள இந்த முடிவை ஆரோக்யமானதாக கருதுகிறோம். முஸ்லிம் நாடுகள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றார்.
source: thatstamil

1 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.