சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் அறிமுக விழா டெல்லியிலும்,பல்வேறு மாநில தலைநகரம் மற்றும் மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் 18ம் தேதி நடைபெற்றது.
அதன்படி சென்னையில் சரியாக மாலை 4மணியளவில் மாபெரும் பேரணி மன்றோ சிலையிலிருந்து புறப்பட்டு சேப்பாக்கம் வரை சென்றது.



மாலை 4மணிக்கு மண்ணடி தம்புச் செட்டித் தெருவில் மாபெரும் பொதுகூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்திற்க்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஹாஜி.S.அமீர் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் திரு.M.ஹஸன் அப்துல் வாரிப் அவர்களும், SDPI பிரதிநிதிகள் திரு.M.முகம்மது அன்ஸாரி, திரு.S.M.சவுந்தராஜன், திரு.S.அப்துல் அஜீஸ், திரு.K.வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திரு.M.முகம்மது புஹாரி அவர்கள் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் திரு.V.பாலு அவர்கள், சமூகசேவகர் K.M.ஷாஹூல் ஹமீது அவர்கள், சமூக சேவகர் மற்றும் தொழில் அதிபர் டாக்டர்.திரு.R.K.முஹைதீன் ஆகியோர் வாழ்த்துரை அளித்தனர்.


மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.J.முஹம்மது நாஜிம் அவர்களும், மாவட்ட தலைவர் திரு.முஹம்மது ஹூசைன் அவர்களும் சிறப்புரையாற்றினர். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.A.அமீர் சுல்தான் அவர்கள் நன்றியுரையாற்றினார். பேரணியிலும்,பொதுகூட்டத்திலும் சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர். இறுதியாக கூட்டம் சுமார் 10மணியளவில் முடிவுற்றது.
inshaallah SDPI will success in India, there is no doubt. Peoples are expecting the right chice for the bright future of INDIA.
sdpi is being a powerful political party in india. this party have and covers all religional peoples. so, it gives to us democraxy.
it fights for all.