21/10/09

சம்ஜெளதா குண்டு வெடிப்பு: பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்களிடம் விசாரணை

0 கருத்துகள்
2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் இருந்து லாகூருக்குச் சென்ற சம்ஜெளதா விரைவு இரயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் நால்வரிடம் CBI விசாரணை நடத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் சைக்கிள் கடை நடத்திவருபவர் பிரவீன் மண்டல், இவர் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவராக உள்ளார். நேற்று, இவரிடமும், மேலும் 3 பேரிடமும் பலாசியா காவல் நிலையத்தில் வைத்து CBI நீ்ண்ட நேரம் விசாரணை நடத்தியது.

சம்ஜெளதா விரைவு இரயிலில் வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் இந்தூரில் இருந்து கொண்டுவரப்பட்டவை என்பதை அறிந்த CBI அது தொடர்பாக பலரை கண்காணித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்தூர் நகருக்கு வந்து இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.

சம்ஜெளதா விரைவு இரயில் குண்டுவெடிப்பில் 68 பயணிகள் கொல்லப்பட்டனர், பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் காயமுற்றனர். இந்த குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் இயக்கங்களே காரணமாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.
CBI ன் இந்த விசாரணையின் மூலம் சங்பரிவார் அமைப்பினர் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
source:webdunia

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.