31/5/09

கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைவதாக போப் வருத்தம்

0 கருத்துகள்

மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக போப் பெனிடிக்ட் கவலை தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பாலஸ்தீனத்தின் பெத்லஹேம் நகரில் தான் இயேசுநாதர் பிறந்தார்.இதையொட்டி, இப்பகுதிகளில் ஒரு காலத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். லெபனான் நாட்டின் உயர் பதவிகளில் கிறிஸ்தவர்கள் தான் உள்ளனர். எகிப்து நாட்டில் உள்ள செல்வந்தர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள். ஈராக் நாட்டு பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் அதிகம் பேர் கிறிஸ்தவர்கள். இங்குள்ள டாக்டர்கள், இன்ஜினியர்கள் என கிறிஸ்தவர்கள் தான் அதிகம் இருந்தனர். கடந்த நூற்றாண்டில் 20 சதவீதமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, நாஜி படைகளின் தாக்குதலாலும், மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாம் தீவிரமாக வளர்ந்து வருவதாலும் , தற்போது 5 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என சமீபத்தில் ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் பயணம் செய்த போப் பெனிடிக்ட் வருத்தம் தெரிவித்திருந்தார். ஜெருசலத்தில் நடந்த கூட்டத்தில் போப் பெனிடிக்ட் பேசுகையில், "கர்த்தரின் காலடி பட்ட இந்த இடத்தில் தான் கிறிஸ்தவம் பிறந்தது. ஆனால், இந்த மண்ணில் கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. இங்குள்ள தேவாலயங்கள் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு விட்டன. இயேசு நடந்துச் சென்ற இந்த பூமி அனைவருக்கும் பொதுவானது" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.