Labels
28/5/09
இஸ்ரேல் ஆயுத ஊழல், ஏர் இந்தியா மேனேஜர் கைது!
நேரம்
4:08 PM
இடுகையிட்டது
பாலைவனத் தூது
0
கருத்துகள்
இஸ்ரேலுடனான 1200 கோடி ரூபாய் ஆயுதபேரத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த ஏர் இந்தியா முன்னாள் துணை பொது மேலாளர் ரமேஷ் நம்பியாரை சி.பி.ஐ கைது செய்துள்ளது. இஸ்ரேல் மிலிட்டரி இண்டஸ்ட்ரீஸுடனான ஆயுத ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கமிசன் பெற, கொல்கத்தாவிலுள்ள ஆர்டினன்ஸ் ஃபேக்டரி போர்டு முன்னாள் டைரக்டர் ஜெனரல் சுதீப்தா கோஷிற்கு ரமேஷ் நம்பியார் உதவியதாக கடந்த தினம் சி.பி.ஐ தெரிவித்திருந்தது. இந்த ஊழல் தொடர்பாக கோஷ் மற்றும் அவரது உதவியாளர் கனாய்லால் தாஸையும் கடந்த 19 ஆம் தேதி சி.பி.ஐ கைது செய்திருந்தது. ரமேஷ் நம்பியாரின் கைப்பெட்டியிலிருந்து 1.29 இலட்சம் ரூபாயும் 19 ஆம் தேதி அவரின் வீட்டில் நடத்திய சோதனையில் 22.92 இலட்சம் ரூபாய் மற்றும் பல வெளிநாட்டு வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றை சி.பி.ஐ கைப்பற்றியது. கொல்கத்தா மற்றும் டெல்லியில் சமீபகாலங்களில் சி.பி.ஐ நடத்தியப் பல்வேறு ரெய்டுகளில், சுதீப்தா கோஷிற்கும் தனியார் ஆயுத வியாபாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் ஆவணங்கள் சி.பி.ஐக்குக் கிடைத்துள்ளது.கொல்கத்தாவிலிருந்து அஷீஷ் போஸ், டெல்லியிலிருந்து பிரதீப் ராணா ஆகிய இருவரையும் இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நான்கு நபர்களுக்கும் ஆயுத வியாபாரி சுதீர் சௌதரியுடன் தொடர்புண்டு என்ற விவரம் முன்னரே வெளியாகியிருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.