28/5/09

மோடிக்கு எதிரான விசாரனை - சிறப்பு புலனாய்வுக்குழு விசாரனை தொடங்கியது

0 கருத்துகள்

குஜராத் மாநிலம், கோத்ராவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு குஜராத் முதல்வர், நரேந்திர மோடி மற்றும் போலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு சம்பந்தம் இருக்கிறதா என்பதனை அறிய டெல்லி உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு விசாரனையை தொடங்கியுள்ளது. இதனை புலனாய்வுக்குழுவின் தலைவர் ராகவன் தெரிவித்தார்.
மோடி உள்ளிட்டவர்களை விசாரிக்க வேண்டும் என கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் எம்பி யின் மனைவியான ஜகியா ஜெப்ரி மனு மீதான விசாரனையில், மோடி மற்றும் குஜராத் அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், திரு, ராகவன் தலைமையில் சிறப்பு புலானாய்வுக்குழுவை அமைத்துள்ளது.
இக்குழு, மூன்று மாத காலத்திற்குள் தங்களின் விசாரனையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.