11/6/09

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்! - இல்லை நாங்கள் பூனைக்கு மட்டும்தான் தோழன்! அமெரிக்கா

"முஸ்லிம் உலகத்தோடு நாங்கள் போருக்கு இல்லை.புதிய அத்தியாயத்தை துவக்குவோம்"என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கெய்ரோ உரை வெறும் வாய்ச்சவாடல் என்பதை அமெரிக்காவின் முஸ்லிம் உலகிற்கெதிரான தொடர்விரோத போக்கு நிரூபிக்கிறது.
ஆப்கானில் அமெரிக்க படையின் எண்ணிக்கை அதிகரிப்பு, அங்குள்ள அப்பாவி மக்கள் மீது தொடர் குண்டுவீச்சை தொடர்ந்து இஸ்ரேலுக்கு சுற்றுபயணம் மேற்க்கொண்டுள்ள அமெரிக்காவின் மேற்கு ஆசிய தூதர் ஜோர்ஜ் மிச்சேல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் பேட்டியளிக்கையில்,"இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு தகர்க்க முடியாதது. நாம் கூட்டாளிகள், நண்பர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு விஷயத்தில் சிறு வீழ்ச்சிக்கும் சமாதானத்திற்கும் நாம் தயாரில்லை.அபிப்ராய விஷயங்களில் உபதேசம் நல்க நான் இங்கு வரவில்லை. மாறாக நண்பன் என்ற நிலையில் பிரச்சனைகளை சர்ச்சைச்செய்யத்தான் நான் இங்கு வந்துள்ளேன்" என்று மிச்சல் கூறினார்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக்,வெளிநாட்டு அமைச்சர் அவிக்தர் லிபர்மேன், அதிபர் சிமன் பெரஸ் ஆகியோரை சந்தித்துவிட்டு ஃபலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸையும் சந்திக்கச்சென்றார் மிச்சல்.
செய்தி ஆதாரம்:தேஜஸ்
தமிழில்:முஸ்லிமீன்