11/6/09

சமாதான முயற்சிகளை தகர்கிறது ஃபத்ஹ் - ஃஹாலித் மிஷ் அல்

ஹமாஸ்-ஃபத்ஹ் இடையேயுள்ள ஒற்றுமைக்கான முயற்சிகளை தகர்ப்பது மேற்குகரையில் ஆட்சிபுரியும் ஃபத்ஹ் அரசு நடத்திவரும் தாக்குதல்கள் என்று , ஹமாஸின் அரசியல் தலைவர் ஃஹாலித் மிஷ் அல் கூறினார்.
எகிப்து தலைமையிலான சமாதான நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதுதான் ஹமாஸின் தீர்மானம் என்றும் அதை தகர்ப்பது ஃபத்ஹ் அரசு என்றும் எகிப்தின் உளவுத்துறை தலைவரை சந்தித்துவிட்டு பேட்டியளிக்கையில் ஃஹாலித் மிஷ் அல் தெரிவித்தார்.
ஹமாஸ் போராளிகளுக்குக்கெதிராக மேற்குகரையில் ஃபத்ஹ் அரசு எடுத்த நடவடிக்கைகள் இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தியது.இதில் பலர் கொல்லப்பட்டனர்.
யூத ஆக்கிரமிப்பு குடியேற்றத்தை விமர்சித்த ஒபாமாவின் உரையை வரவேற்ற மிஷ் அல் வார்த்தைகளல்ல நடவடிக்கைள்தான் முக்கியம் என்று குறிப்பிட்டார். ஃபலஸ்தீனிகளின் முக்கியக்கோரிக்கைகளான கிழக்கு ஜெருஸலத்தின் எதிர்காலம், 1967-இல் எல்லைகளடங்கிய ஃபலஸ்தீன் தேசம், அகதிகளை திரும்ப அழைத்தல் போன்ற விஷயங்களிலும் அனுகூலமான நடவடிக்கைகள் ஒபாமாவிலிருந்து ஏற்படவேண்டும் என்று ஃஹாலித் மிஷ் அல் கூறினார்.
செய்தி ஆதாரம்:தேஜஸ்
முஸ்லிமீன்