11/6/09

விபத்துக்குள்ளான இஸ்ரேலிய பெண்மணியைக் காப்பாற்றிய பாலஸ்தீனியர்!

இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கிடையேயும் ,இஸ்ரேலிய அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்பட்டு பிரச்சனைகளின் இடையே வாழ்ந்து வரும் பாலஸ்தீனியர்கள், விபத்துக்குள்ளான ஒரு இஸ்ரேலிய தாய் மற்றும் குழந்தையின் உயிரைக் காத்து மனிதாபிமானத்துக்கு முன்னுதாரணமாக விளங்கிய ஃபலஸ்தின் மக்களின் மனிதநேயம் பாராட்டத்தக்கது.
மேற்கு கரையிலுள்ள திகுவா நகரத்தில் வேகமாக கார் ஓட்டிச் சென்ற இஸ்ரேலிய பெண்ணின் கார், கட்டுப்பாடு இழந்து கவிழ்ந்தது. காரினுள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பெண் மற்றும் நான்கு மாதமே ஆன அப்பெண்ணின் குழந்தையைப் பலஸ்தீனியர்கள் உடனடியாக மீட்டெடுத்து மருத்துவமனை சேர்த்தனர். தற்போது அப்பெண்ணும் குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
இச்சம்பவத்தை இஸ்ரேலிய பத்திரிக்கைகளும் ஆச்சரியத்துடன் செய்தியாக்கியுள்ளன. திகுவா, இஸ்ரேல் ஆக்ரமித்து யூதர்களைக் குடியேற்றியுள்ள பிரதேசமாகும். இப்பகுதியில் இஸ்ரேல் கடும் தாக்குதலை ஃபலஸ்தீனிகளின் மீது நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் வாழும் யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சாலையில் இரும்பு திரை நிர்மாணிக்க இஸ்ரேல் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி ஆதாரம்:தேஜஸ்
முஸ்லிமீன்