இஸ்லாமிய நாடுகளில் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஈரானில் அதிபருக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.போட்டியில் தற்போதைய அதிபர் உட்பட நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தற்போதைய அதிபருடன் போட்டியிடுபவர்களில் முன்னாள் பிரதமர் மீர் ஹுஸைன் மூஸாவியும் உள்ளார். எனவே நான்கு பேர் களத்தில் நின்றாலும் கடும் போட்டி தற்போதைய அதிபர் அஹமதி நிஜாத் மற்றும் மீர் ஹுஸைன் மூஸாவி ஆகியோருக்கிடையேதான் வலுவாக உள்ளது.நேற்று நடந்த கடைசி கட்ட பிரச்சார கூட்டங்களில் தற்போதைய அதிபரின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் பற்றி மீர் ஹுஸைன் மூஸாவி கடும் விமர்சனம் எழுப்பினார். எனினும் மத நம்பிக்கையாளர்கள் மற்றும் ஏழைகளுக்கும் மத்தியில் அஹமதி நிஜாத் நம்பிக்கை நட்சத்திரமாக தொடர்கின்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது.