12/6/09

வேலூர் எம்.பி. எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு ஈமான் அமைப்பு நடத்திய பாராட்டுவிழா

ஈமான் அமைப்பு இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்கின் வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் அவர்களுக்கு குவைத் பள்ளியில் பாராட்டு விழா ஒன்றை நடத்தியது.
11.06.2009 வியாழ‌க்கிழ‌மை அன்று இரவு சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஈமான் அமைப்பின் த‌லைவ‌ர் அல்ஹாஜ் செய்ய‌து எம். ஸலாஹுத்தீன் அவர்கள் த‌லைமை தாங்கினார்.பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிக‌ழ்வில் பல்வேறு ஜ‌மாஅத் நிர்வாகிக‌ள் க‌ல‌ந்து கொண்டு வாழ்த்துரை வ‌ழ‌ங்கி‌ன‌ர்.
EIFF என்றழைக்கப்படும் எமிரேட்ஸ் இந்தியா பிராடேர்னிட்டி போரம் (Emirates India Fraternity Forum) சமூக அமைப்பின் சார்பாக அதன் பிரதிநிதிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். EIFF மக்கள் தொடர்பாளர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக் கோரி EIFF எடுத்து வரும் முயற்சிகளை தனது உரையில் குறிப்பிட்ட அவர், பாராளுமன்றத்தில் இது குறித்து கோரிக்கை வைத்து பேசும்படி அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்களைக் கேட்டுக்கொண்டார். பின்னர் EIFF ன் கோரிக்கை மனுவை எம்.பி.இடம் அளித்தார் (மனுவின் முழு விவரம் இணைப்பில் காண்க).எம். பி. அவர்களுக்கு பல்வேறு ஜமாஅத் நிர்வாகிகளும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். EIFF ன் சார்பாக அதன் செயற்குழு உறுப்பினர் எம். எஸ். அப்துல் ஹமீது பொன்னாடை போர்த்தினார்.இறுதியில் வேலூர் எம்.பி. எம். அப்துல் ர‌ஹ்மான் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.ஹமீது யாசின் அவர்கள் நன்றியுரை நவின்றார். இந்நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை ஈமான் அமைப்பின் விழாக்குழுவின‌ர் சிறப்பாக செய்திருந்தன‌ர்.
செய்தியாளர்: பாலைவனத் தூது
முஸ்லிம் உலகின் செய்திகளை உடனுக்குடன் அறிய காணுங்கள் : http://palaivanathoothu.blogspot.com ஜூன் மாத பாலைவனத் தூதுவைப் படித்துவிட்டீர்களா?