9/6/09

பொது சிவில் சட்டம் வேண்டும் ஆர்.எஸ்.எஸ் கேம்பில் உச்சநீதி மன்ற முன்னாள் நிதிபதியின் வாழ்த்துச் செய்தி.

3 கருத்துகள்

இந்தியாவில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதியான கேரளாவைச் சேர்ந்த கெ.டி. தோமஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சி கேம்பில், பாஜக நீண்டகாலமாக கோரி வரும் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவான நீதிபதி கெ.டி. தோமஸின் அறிக்கை வாசிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் பயிற்சி கேம்பில் முக்கிய விருந்தினராக கலந்துக் கொள்ள கெ.டி. தோமஸ் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சில தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக நேரடியாக கலந்து கொள்ள முடியாமையைத் தெரிவித்து, அவரின் வாழ்த்து கடிதத்தை அனுப்பியிருந்தார். கேம்பில் அவருக்குப் பதிலாக அவர் அனுப்பிய வாழ்த்து கடிதம் படிக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
"இந்திய அரசியல் சட்டத்தின் 44 ஆவது பிரிவில் கூறப்படும் ஆலோசனைகளை நடைமுறைபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பவர்களை இனவாதிகளாக முத்திரை குத்துவது வேதனைக்குரியது. நாட்டில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிராக ஏற்றுக் கொள்ளத் தக்க காரணங்களைக் கூறுவதற்கு எவராலும் முடியாது. மதத்தைத் தனிமனிதன் சார்ந்தே காண வேண்டும். ஒவ்வொருவரும் இந்தியர் என்பதற்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும். இவ்விஷயத்தை நாட்டு மக்களுக்குப் புரிய வைக்க ஆர்.எஸ்.எஸ் முன்வர வேண்டும்" என்று அவ்வாழ்த்தில் கூறியுள்ள அவர், பொது சிவில் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ஊடகங்களையும் விமர்சித்துள்ளார்.

3 கருத்துகள்:

 • 9 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 1:49
  Enna Kodumai?, :

  "ஒவ்வொருவரும் இந்தியர் என்பதற்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும். இவ்விஷயத்தை நாட்டு மக்களுக்குப் புரிய வைக்க ஆர்.எஸ்.எஸ் முன்வர வேண்டும்" - - என்னா கொடுமை இது? சிறுபான்மை இன மக்களை மனிதர்களாக கூட மதிக்காத ஒரு அமைப்பு ஆர் எஸ் எஸ். இவங்க போய் 'ஒவ்வொருவரும் இந்தியர்' என்று நாட்டு மக்களுக்கு புரிய வைக்கப் போறாய்ங்களா? அதையும் ஒரு முன்னாள் உச்சா நீதிமன்ற நீதிபதி சொல்றாரா? வெளங்குனா மாதிரிதான்!

 • 9 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 3:23

  The above adds light to the fact that there are minimum 20 RSS judges sitting on every High courts!!! so as in Supreme Court as well!!!

 • 10 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 1:43

  நானு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவே இல்லை. மேன்மை தாங்கிய அரசியின் இராணுவம் என்னைத் தவறுதலாகக் கைது செய்து விட்டது.

  தயவு கூர்ந்து என்னை மன்னித்து விடுதலை செய்யனும் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த கூட்டம் இந்தியாவைப் பத்தி பேசுதா? நல்ல கூத்துதான்.

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.