9/6/09

ஈரானில் பாக்கிஸ்தானைச்சார்ந்த கோத்திர வர்க்க குழுவின் தாக்குதல்களுக்கு பின்னால் அமெரிக்கா: அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

0 கருத்துகள்
ஈரானில் சமீபத்தில் நடைபெற்ற கொரில்லா தாக்குதல்களுக்கு 2005இலிருந்து அமெரிக்காவின் உதவியோடு செயல்பட்டு வரும் பாக்கிஸ்தானை சார்ந்த கோத்திர இனக்குழு என்று அமெரிக்க-பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.
ஜுன்துல்லா என்ற இந்த இயக்கத்தில் பலூச் இனத்தை சார்ந்தவர்கள்தான் இடம்பெற்றுள்ளனர்.ஈரானின் எல்லைக்கு மிக அருகிலுள்ள பலூசிஸ்தான் பகுதியில்தான் இந்த இயக்கம் செயல்படுகிறது. ஈரானிலுள்ள ஏராளமான ராணுவ வீரர்களையும் அதிகாரிகளையும் கடத்தி கொலைச்செய்தது இந்த் குழுதான் என்று பாக்.-அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ABC நியூசிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.
ஜுன்துல்லாவிற்கு நேரடியாக உதவுவதற்கு அமெரிக்க காங்கிரஸின்(பாரளுமன்றம்)அனுமதி அவசியமென்பதால் வேறு வழிகள் மூலம் அவர்களுக்கு உதவியதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜுன்துல்லாவின் இளம் தலைவரான அப்துல் மலிக் ரேகிக்கு ஐரோப்பிய-வளைகுடா நாடுகளோடு தொடர்புடைய ஈரானைச்சார்ந்தவர்களின் வழியாக பணம் பட்டுவாடாச்செய்யப்படுவதாக கோத்திரவர்க்கத்தைச்சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
ஈரானின் ராணுவ வீரர்களையும் மற்றும் எல்லை பாதுகாப்புப்படையைச் சார்ந்தவர்களையும் கடத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் ஜுன்துல்லாவிடம் உண்டு.ஈரானைச்சார்ந்த சிலரை தான்தான் கொலைப்படுத்தியதாக அப்துல் மலிக் ரேகி கூறுகிறார்.போதைமருந்து கடத்தல்காரனாகிய ரேகி தாலிபானுடன் தொடர்போரில் ஈடுபட்டிள்ளதாக ABC நியூஸிற்காக செய்தி சேகரித்துள்ள அலெக்ஸிஸ் தேபத் கூறுகிறார்.
நிக்ஸ்ன் மையத்தில் தீவிரவாத எதிர்ப்பு குழுவில் அனுபவம் வாய்ந்த நபராகிய அலெக்ஸிஸ் தேபத் பாக்கிஸ்தான் அதிகாரிகளோடும் கோத்திரவர்க்கத்தினரோடும் நடத்திய நேரடி பேட்டி மூலம் அதிமுக்கியமானதும் அமெரிக்காவின் நயவஞ்சக தந்திரத்தை பகிரங்கப்படுத்துவதுமான செய்தி அறிக்கையை தயார்செய்துள்ளார் .
நன்றி:தேஜஸ் மலையாள நாளிதழ்.
தமிழாக்கம்:முஸ்லிமீன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.