தாய்லாந்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சோ-அய்-ரோங் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசலில் மாலை நேர தொழுகை நடந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பள்ளிவாசல் இமாம் உள்பட 11 பேர் மரணம் அடைந்தனர். மேலும் 12 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தொழுகை நடந்து கொண்டிருந்தபோது 5 நபர்கள் பள்ளிவாசலின் பின்புறமாக உள்ளே நுழைந்து சுடத் தொடங்கியதாக தெரிகிறது. அப்போது பள்ளியில் சுமார் 50 பேர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
தாய்லாந்தில் தெற்கு பகுதியில் மலேசியாவை ஒட்டியபடி உள்ள இந்த பிரதேசம் முஸ்லிம் மலாய் மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. 1902-ல் தாய்லாந்து இந்தப் பகுதியை தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. அப்போதிலிருந்து இங்கு கலவரங்கள் நடந்து வருகின்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.