8/6/09

காஷ்மீர் - கொலை செய்யப்பட்ட இரு பெண்களும் வன்புணர்ச்சி செய்யப் பட்டிருந்தனர்!

1 கருத்துகள்

ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இரு பெண்கள் கொல்லப் பட்டுக் கிடந்தனர். இராணுவத்தினர் அந்தப் பெண்களை வன்புணர்ச்சி செய்து கொன்றுவிட்டதாக தெரிகிறது . இதனை கண்டித்து காஷ்மீர் மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடந்த 8 நாட்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரு பெண்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில், இரு பெண்களும் வன்புணர்ச்சி செய்யப் பட்டு பின்னர் கொல்லப் பட்டதாகக் தெரியவந்துள்ளது .முன்னதாக இந்தக் கொலை மற்றும் வன்புணர்ச்சியை காவல்துறை புகாராக ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தது. கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதாகக் கூறியிருந்தார். அந்த இரு பெண்களும் கீழே தவறி விழுந்து இறந்துவிட்டதாகவும் அவர்கள் வன்புணர்வு செய்யப் படவில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை அம்மாநில முதல்வரின் கருத்துகளுக்கு எதிராக அமைந்துள்ளதை அடுத்து போராட்டம் மேலும் தீவிரம் அடையக் கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விட்டதாக மாநில காவல்துறை இயக்குநர் குல்தீப் கோதா கூறினார். அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் அவர் கூறினார்.இப்பிரச்சனை தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 400 பேர் காயமுற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிவருவதாக கஷ்மீரின் ஹுரியத் அமைப்பின் தலைவர் சையது அலி கீலானி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சிறை வைத்திருக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.

1 கருத்துகள்:

  • 8 ஜூன், 2009 அன்று 9:37 PM
    கலீம் :

    குஜராத்தில் காவிகளின் அட்டூழியம்,
    இங்கு காவலர்களின் அட்டூழியம். என்று
    மாறும் இது போன்ற அட்டூழியம்.

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.