8/6/09

டாட்டாவிற்கு மோடியின் அன்பளிப்புகள் - அதிர்ச்சி தகவல்!

0 கருத்துகள்

நானோ கார் தொழிற்சாலை நிர்மாணத்திற்காக குஜராத் அரசு டாட்டாவிற்கு 30,000 கோடி ரூபாய்க்கும் மேலாக இலவசமாக வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தண்ணீர், விவசாய நிலம், மின்சாரம், கேஸ் உட்பட கோடிகணக்கான ரூபாய்களுக்கான தள்ளுபடியை டாட்டாவிற்காக நரேந்திரமோடி, குஜராத் அரசின் கஜானாவிலிருந்து அள்ளி வழங்கியுள்ளதற்கான ரகசிய ஆவணங்கள் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது.
ஆண்டு ஒன்றுக்கு 60 பில்லியன் டாலருக்கும் மேலாக வருமானம் உள்ள, உலக கோடீஸ்வரரான டாட்டாவின் வியாபாரத்திற்காக, குஜராத் அரசின் கீழுள்ள பல்வேறு அரசு ஏஜன்ஸிகள் அனைத்து சட்டதிட்டங்களையும் மீறி கோடிக்கணக்கான ரூபாய்கள் தள்ளுபடி செய்துள்ளன. கார் தொழிற்சாலை நிர்மாணத்திற்காக 1,100 ஏக்கர் விவசாய நிலத்தைக் குறைந்த விலைக்கும் 9.750 கோடி ரூபாயை வெறும் 0.1 சதவீத வட்டிக்கும் டாட்டாவுக்கு மோடி வழங்கியுள்ளார்.
மிகக் குறைந்த விலையில் கொடுக்கப்பட்ட 1,100 ஏக்கர் நிலத்திற்கான 400.65 கோடி ரூபாயை எட்டு தவணைகளில் அரசுக்குச் செலுத்தினால் போதும். அதிலும் இரண்டு ஆண்டுக்கான அரசு ஜாமீன் உண்டு. 0.1 சதவீத வட்டியின் மீது கொடுக்கப்பட்ட கடன் தொகையை 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தினால் போதும் என்ற உறுதிமொழியின் மீதே மோடி, டாட்டவைக் குஜராத்தில் குடியமர்த்தியுள்ளார்.
வங்காளத்தில் நிர்மாணிக்கப்பட்ட தொழிற்சாலை உபகரணங்களும் மற்ற வசதிகளையும் குஜராத்திற்குக் கொண்டு வர ரூபாய் 700 கோடியினைச் செலவழித்த மோடி, டாட்டாவின் தொழிலாளிகளைக் குடியமர்த்த 100 ஏக்கர் நிலத்தையும் இலவசமாக வழங்கியுள்ளார். விவசாய நிலங்களை வியாபார தேவைகளுக்காக மாற்றுவதற்கான பதிவு கட்டணத்தையும் டாட்டாவிற்கு வழங்கிய முழு நிலத்திற்கு மோடி தள்ளுபடி செய்துள்ளார்.
விவசாயிகளிடமிருந்து வியாபார தேவைகளுக்கு எனக் கூறி அரசு கைப்பற்றிய ஏக்கர்கணக்கான நிலத்தையே, டாட்டாவிற்குக் குறைந்த விலையில், பதிவு கட்டணமும் இன்றி மோடி வழங்கியுள்ளார். தொழிற்சாலைக்காக பல கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை இலவசமாக போட்டுக் கொடுத்த குஜராத் அரசு, தொழிற்சாலைக்காக வழங்கிய 200 கிலோ வோல்ட் மின்சாரத்திற்கான பூரண வரிவிலக்கையும் அளித்துள்ளது. அதற்கும் மேலாக, நாள்தோறும் 14,000 கியூபிக் மீட்டர் தண்ணீரை இலவசமாகவும் குஜராத் அரசு டாட்டாவுக்கு வழங்குகிறது.
தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளையும் அரசே கவனிக்கும். எல்லாவிதமான வரிகளிலிருந்தும் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு முழு விலக்கு எனத் துவங்கிப் பல்வேறு சலுகைகளைக் குஜராத் அரசு டாட்டாவிற்கு அனைத்து விதிமுறைகளையும் மீறி வாரி வழங்கியுள்ளது. பரவலாக பெரிய வியாபாரிகளால் "குஜராத் முன்னேற்றம்" எனக் கூறப்பட்ட, தொழில் முன்னேற்றத்தின் பின்னணியில், பெரிய வியாபாரிகளுக்கு அரசு கஜானாவிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் சலுகைகளாக வாரி வழங்கப்படுகிறது என்பதற்கான ஆதாரமாக வெளியாகியிருக்கும் டாட்டாவின் நானோ கார் தொழிற்சாலைக்காக குஜராத் வழங்கியுள்ள சலுகைகள் தெளிவிக்கின்றன.
டாட்டாவிற்கு நானோ கார் தயாரிக்க, குஜராத் அரசு வழங்கும் சலுகைகள் தெரிவிக்கும் கணக்கின்படி கார் தொழிற்சாலையின் 50 சதவீதத்திற்கும் அதிகமான செலவை குஜராத் அரசே செலவழிக்கின்றது. ஆனால், கார் வெளியாகும் போது முழு இலாபமும் அடையப்போவதோ, ஆண்டுக்கு 60 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருமானமுள்ள உலகக் கோடீஸ்வரரான டாட்டா!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.