8/6/09

லெபனான் தேர்தல் - அமெரிக்க ஆதரவு அணி வெற்றி!

0 கருத்துகள்

லெபனான் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அமெரிக்க ஆதரவு அணியான சாத் ஹரீரியின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முக்கிய எதிர்கட்சியான ஹிஸ்புல்லா அணியை இது தோற்கடித்துள்ளது.இது லெபானானின் ஜனநாயக வரலாற்றில் முக்கியமான நாள் என்று வெற்றி பெற்ற சாத் ஹரீரி கூறியுள்ளார். முன்னாள் கோடீசுவர அரசியல்வாதியான ரபீக் ஹரீரியின் மகன் சாத் ஹரீரி என்பது குறிப்பிடத்தக்கது.
128 இடங்களைக் கொண்ட லெபனான் நாடாளுமன்றத்தில் 70 இடங்களை சாத் ஹரீரியின் அணி பெற்றுள்ளது. மீதமுள்ள 58 இடங்களை ஹிஸ்புல்லாவும் அதன் கூட்டணிக் கட்சிகளான கிருஸ்தவ மற்றும் ஷியா கட்சியினர் பெற்றுள்ளனர்.நீண்ட காலம் உள்நாட்டுப் போர் நடைபெற்ற லெபனானில் ஒரு பிரிவினர் சிரியா ஆதரவாளர்களாகவும் மற்றவர்கள் அமெரிக்க ஆதரவாளர்களாகவும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க ஆதரவாளரான ரபீக் ஹரீரி படுகொலை செய்யப் பட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

படைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.